search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruverumbur erumbeeswarar temple"

    புராதன சிறப்பு மிக்க திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 27-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருவெறும்பூரில் புராதன சிறப்பு மிக்க எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்லக்கு, கைலாச, அன்ன வாகனங்களில் வீதியுலா வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று உமையவள் நறுங்குழல் நாயகிக்கும், எறும்பீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்பகுளத்தில் தண்ணீர் உள்ளதால் 30-ந் தேதி தெப்ப திருவிழாவை நடத்திட கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 
    திருவெறும்பூரில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை மறுநாள் (18-ம் தேதி) தொடங்குகிறது.
    திருவெறும்பூரில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 19-ந் தேதியன்று காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.

    மாலையில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 25 மற்றும் 26-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், மாலையில் நந்தி வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. இரவில் நடராஜர் திருவீதி உலா வந்து தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி வைகாசி விசாகத்தன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 29-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி மாலை 7 மணிக்கு மேல் விடையாற்றி, மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    ×