search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்"

    ஹூண்டாய் நிறுவனம் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலின் ஏராளமான கனெக்டெட் அம்சங்களை கொண்டிருந்தது.


    தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு ஹோம்-டு-கார் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ மாடல் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஹூண்டாய் விற்பனை மையங்கள் மற்றும் ஹூண்டாய் இந்திய க்ளிக் டு பை தளத்தில் நடைபெறுகிறது.

     ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட்

    ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு ஹோம் டு கார் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் பல்வேறு கனெக்டெட் அம்சங்கள் புது வென்யூ மாடலில் வழங்கப்படுகிறது. 
     
    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.  
    நிசான் மோட்டார் இந்தியா தனது மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் புது மைல்கல் எட்டியுள்ளது. இந்த மாடலின் விற்பனை 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கியது.

    நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 

    நிசான் நிறுவனத்தின் வாகன விற்பனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் மாடலாக மேக்னைட் அமைந்தது. கடந்த டிசம்பர் 2020 வாக்கில் நிசான் மேக்னைட் மாடலின் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டறை ஆண்டுகளில் நிசான் மேக்னைட் மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     நிசான் மேக்னைட்

    இந்தியாவில் அறிமுகமான முதல் மாதத்திலேயே நிசான் மேக்னைட் மாடல் 32 ஆயிரம் முன்பதிவுகளை கடந்தது. இதை அடுத்து 2021 பிப்ரவரி மாதத்தில் நிசான் மேக்னைட் மாடலை வாங்க 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மாடலை வாங்க சுமார் 78 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இன்றும் நிசான் மேக்னைட் மாடலை வாங்க சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

    நிசான் மேக்னைட் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த காரின் விலை பலமுறை மாற்றப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 5 லட்சத்து 88 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 56 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் விலையை மாற்றியமைத்து உள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. ஆஸ்டர் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.


    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் எஸ்.யு.வி. விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் விலை தற்போது ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. 

    இந்திய சந்தையில் ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் 1.3 லிட்டர் கொண்ட ஸ்டைல் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

     எம்.ஜி. ஆஸ்டர்

    எம்.ஜி. ஆஸ்டர் மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் பெறலாம். 1.3 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் புதிய மேம்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் டாடா நெக்சான், நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலை ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. எர்டிகா மற்றும் XL6 பேஸ்லிப்ட் மாடல்களை தொடர்ந்து மாருதி சுசுகி அறிமுகம் செய்யும் மூன்றாவது பெரிய மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா அமைந்துள்ளது. 

    இந்திய சந்தையில் 2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் டாடா நெக்சான், நிசான் மேக்னைட், மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக விட்டாரா பிரெஸ்ஸா இருக்கிறது. மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த காம்பேக்ட் எஸ்.யு,வி. மாடல் அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது.

    விட்டாரா பிரெஸ்ஸா

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற கேபினில் அதிகளவு மாற்றங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் முன்புற கிரில் மாற்றப்பட்டு, அதிக கூர்மையாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் க்ரிஸ்ப் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இவை காருக்கு அதிக பிரீமியம் தோற்றத்தை வழங்கும்.

    காரின் உள்புறத்திலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் டேஷ்போர்டு மற்றும் ஓட்டுமொத்த லே-அவுட் மாற்றப்பட்டு, பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், HUD டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
    ×