search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிக களஞ்சியம்"

    • விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும்.
    • அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்து வெள்ளி விரதம், செவ்வாய் விரதம், சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், துர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.

    தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத முறைகளில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.

    விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும்.

    அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

    ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்கள் கடைப்பிடிக்கும் இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.

    • இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது.
    • அதற்கு தலைவரான கணபதி பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

     மனித உடல் ஓர் அற்புத இறை சக்தியை உள் அடக்கிய பெட்டகம்.

    இந்த உடல் உள் உறுப்புக்களை இயக்குவது வெவ்வேறு சக்கரமாகும்.

    முக்கியமாக ஆறு ஆதார சக்கரங்களை நம் முன்னோர் வழிவந்த சித்தர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

    இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது.

    அதற்கு தலைவர் கணபதி. இவர் பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

    உடம்பில் உள்ள முக்கியச் சக்கரங்கள்

    மூலாதாரம்- கணபதி

    சுவாதிஷ்டானம்-பிரம்மா, சரஸ்வதி

    மணிபூரகம் -மகாவிஷ்ணு, மகாலட்சுமி

    அனாகதம்-சிவன், பார்வதி

    விசுக்தி-அர்த்தநாரீஸ்வரர்

    ஆக்ஞை-சதாசிவம்

    சிதாகாசம்-வெட்டவெளி

    யோகம் என்றால் இணைதல் என்று பொருள். மனம், உடல் ஆன்மாவுடன் லயமாவதே யோகம்.

    இதற்கு நம் வினைகள் தடையாக உள்ளன.

    இந்த கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் கணபதியை நம் உடம்பில் உள்ள மூலாதாரச்சக்கரத்தில் எப்படி தியானிப்பது என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் கணபதியின் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழலாம்.

    செல்வம் செழிக்கும். ஆரோக்கியம் கைகூடும். புகழ் பெருகும். உடல், மன அமைதி கிடைக்கும்.

    இந்த சக்கரா தியானத்தில் கூட மற்ற சக்கரங்களில் தியானம் செய்யும் நெறிமுறைகளோடு செய்ய வேண்டும்.

    ஆனால் மூலாதாரத் தியானம் பயப்படாமல் செய்யலாம். எந்த பக்க விளைவும் கிடையாது.

    காரணம் இதில் நம் பிள்ளையார் அல்லவா அதிபதி!

    • இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற் கடவுள்.
    • நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும்.

    கணம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு.

    இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற் கடவுள்.

    நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும்.

    மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது.

    அதற்கு நாயகன் விநாயகர் ஆவார்.

    வினைகளுக்கு நாயகன் விநாயகன்.

    மனிதனுடைய வெவ்வேறு வினைகளை வேரோடு அறுத்து மங்களத்தைக் கொடுப்பவர் விநாயகர் ஒருவரே.

    • இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
    • தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

    எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் 'சுக்லாம்பரதரம்' சொல்வோம்.

    இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.

    சுக்லாம்பரதர, விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

    பிரஸந்த வதநம் தியோயேத் சர்வ விக்நோப சாந்தயே

    'சுக்லாம்பரதர' - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.

    'விஷ்ணு' என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். 'சசிவர்ண'- நிலா மாதிரி நிறம் உடையவர்.

    'சதுர்புஜ' - நான்கு கை உள்ளவர்.

    'பிரஸந்த வதந'- நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது.

    இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.

    தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

    மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன.

    அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது.

    மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.

    • தோஷங்கள் யாவும் நீங்கும்.
    • வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும்.

    விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை போற்றி வழி படுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம். படியுங்கள். பலன் பெறுங்கள்.

    "தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே !

    கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே !

    அற்புதம் நிகழ்த்துபவனே !

    மோதகம் ஏந்தியவனே !

    சந்திரனைத் தலையில் சூடியவனே !

    உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே !

    உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே !

    உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே !

    பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே !

    வல்லமை நிறைந்தவனே !

    ஆனைமுகனே !

    கருணை மிக்க இதயம் கொண்டவனே !

    அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே !

    எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

    ஓங்கார வடிவினனே ! கருணாமூர்த்தியே !

    பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே !

    எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே !

    பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே !

    அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே !

    நித்ய வடிவினே !

    உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே ! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே !

    பக்தர்களின் துயர் களைபவனே !

    ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே !

    செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே !

    உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.

    ஒற்றைக் கொம்பனே ! கணபதீஸ்வரா !

    சிவ பெருமானின் பிள்ளையே !

    ஆதிஅந்தமில்லாதவனே !

    துன்பம் துடைப்பவனே !

    யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே !

    உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.

    இதை விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.

    தோஷங்கள் யாவும் நீங்கும்.

    வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும்.

    குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்.

    • அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.
    • முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும்.

    நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும்.

    இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.

    முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும்.

    உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர்.
    • பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

    பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள்.

    மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர்.

    சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

    • விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம்.
    • என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம்.

    விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம்.

    என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம்.

    வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.

    விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

    அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும்.

    சென்ற வேலையில் வெற்றி உண்டாகும்.

    • இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
    • முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

    சரபேஸ்வரருக்கு கும்ப கோணத்திற்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.

    திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும்.

    இப் பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

    இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.

    இது மட்டுமின்றி விவவனம், திரிபுரவனம், தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளன.

    ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இக் கோவில் அமைந்துள்ளது. இதற்கு 3 முக்கிய வாசல்கள் இருக்கிறது.

    அவைமட்டுமின்றி அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில் ஒன்றும், வட பகுதியில் ஒன்றும் ஆக 2 வாசல்கள் இருக்கின்றன.

    முதல் கோபுரம் 7 நிலைகளுடனும், 2ம் கோபுரம் 3 நிலைகளுடனும் கூடிய வாசல்கள் அழகுபெற செய்கின்றன.

    இக் கோவிலுக்கு 2 பிரகாரங்கள் இருக்கிறது.

    அவற்றுள் முதல் திருச் சுற்றாலையில் திருச்சுற்று மாளிகை இருக்கிறது.

    இம் முதல் திருச்சுற்றாலையில் நடுப்பகுதியில் நடுக்கந் தீர்த்த பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.

    கர்ப்ப கிரகத்தின் விமானம் தஞ்சை ராஜராஜேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் இவைகளின் விமானங்களை ஒத்தது ஆகும்.

    இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.

    முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

    2ம் திருச்சுற்றாலையில் வசந்த மண்டபமும், யாக சாலையும் அமைந்திருக்கிறது.

    மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகம்பகரேசுவர்.

    தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.

    திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும்.

    • திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
    • ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

    அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம். ஸர்பரேஷ்வரர் ஹோமம். சரித்தியங்கர ஹோமம் நடைபெறும்.

    கணபதி ஹோமத்தின் பலன்கள்

    சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.

    நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்

    திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

    அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்

    ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    சர்பரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்

    பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.

    பிரத்தியங்கரா தேவி ஹோமத்தின் பலன்கள்

    கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.
    • இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

    பிரத்தியங்கரா தேவி வழிபாடு குறித்து சேலம் அன்னை உக்ரபிரத்தியங்கரா கோவில் அர்ச்சகர் பூபதி சிவாச்சாரியார் கூறிய தாவது:

    இந்த கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆதிசக்தி அம்சமாகிய அன்னை ஸ்ரீ அதர்வண பத்ரகாளி.

    இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.

    இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

    இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.

    அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.

    இந்த தேவியின் மகிமை பற்றி புலிப்பாணி முனிவர் மிகவும் விமரிசையாக கூறியுள்ளார்.

    இந்த தேவி ஸ்ரீதேவி எந்திரத்தின் உத்தரதிக்கில் இருப்பவர் இந்த தேவியின் அவதாரம் ஆயிரம் சிங்க முகங்களும் இரண்டாயிரம் கைகளும் கோரைபற்களும் நீல நிறம் உடையவளாகவும், ஆமை மாலையையும் கபால மாலையும் அணிந்து காட்சி தருபவள் அக்கினி சுவாலை கொண்டவள்.

    சிம்ம வாகனத்தில் அமர்ந்து அஷ்ட நாகங்களையும் குடையாக கொண்ட இந்த தேவியின் பெயர் உக்ரகாளி அதர்வண பத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    இந்த தேவியானவள் விர்பரேஸ்வரர் சக்தியில் இருந்து தோன்றியவள்.

    இந்த தேவியானவள் தர்மம் காத்து அதர்மம் அழித்து இப்பூவுலகை காத்தருளுகிறாள்.

    இந்த தேவியை மங்களம் தரும் மகா காளிதேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    • இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள்.
    • இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.

    1.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள்.

    2.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.

    3. இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள்.

    4. இவளது மந்திரத்தை "அங்கிரஸ்' "பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே "பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள்.

    5. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.

    6. மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு பிரார்த்திக்கலாம்.

    7. நீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பம்.

    8. வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை. பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமான இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.

    9. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை.

    10. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.

    11. இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம்.

    ×