search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியம்"

    மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு  ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். புதிய பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். 

    இந்நிலையில், மே 29ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாகவும், அக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அந்த அறிக்கையில், 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்குவதற்கு தேவையான நிதி மத்திய பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

    ஆனால், வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானது என பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) தெரிவித்துள்ளது. 

    ‘மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவோ அல்லது பரிந்துரையோ மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என பிஐபி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
    பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் ஆன்லைன் சேவைகளை சமூக வலைதளத்திலும் பெறலாம் என திருச்சி மண்டல ஆணையாளர் முருகவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியில்  பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் அனைத்து ஆன்லைன் சேவைகள் பற்றிய உடனடி தகவல்கள் மற்றும் நன்மைகள் டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், டிஜிலாக்கர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலமும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

    அதாவது Twiter-@socialepfo, Facebook-https://www.facebook.com /socialepfo, Youtube- https://Youtube.com/socialepfo, Dogilocker-https:// digilocker.gov.in, mobile app: UMANG என்ற சமூக வலைதளங்களில் சேவைகளை பெறலாம்.

    தொழில் அதிபர்கள், இ.பி.எப். உறுப்பினர்கள், இ.பி.எப். ஓய்வூதியம் பெறுவோர் சேவைகள், புதிய தகவல்கள் மற்றும் முன்மயற்சிகள் பற்றிய முதல் தகவல்களை மேலே குறிப்பிட்டுள்ள சமூக ஊடகங்கள் மூலம் தாரளமாக பெறலாம்.

    தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் ஏதேனும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய நாட்டில் உள்ள அனைத்து இ.பி.எப்.ஓ. அலுவலகங்களிலும் https:// epfindia.gov.in/ site docs/PDFs/ Downloads PDFs/ Whatsapp_ Helpline.pdf, http:// epfigms.gov.in என்ற வழிகளில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பூசாரிகளுக்கு மாதந்தோறும் தவறாமல் ஓய்வு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    வங்கி கணக்கிற்கு ஓய்வூதியம் அனுப்ப வேண்டுமென, ஓய்வு பெற்ற கோவில் பூசாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:-

    கிராமப்புற கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், உதவி ஆணையர் அலுவலகத்தில் கிடைத்து வந்தது. அதுவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைத்தது. இதனால், வயதான பூசாரிகள் சிரமப்பட்டு வந்தனர். கிராமப்புற கோவில் பூசாரிகள் ஓய்வூதிய தேர்வு குழு கூட்டம் சமீபத்தில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

    அதில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் தவறாமல் ஓய்வு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். இதனால் ஓய்வுபெற்ற பூசாரிகளின் வங்கி கணக்குக்கு, நேரடியாக ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் 3,500க்கும் அதிகமான பூசாரிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×