search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPEECH COMPETITION"

    • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியங்கள் வரைதல் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் வெல்கம் என்.மோகன், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி நிர்வாக இயக்குனர் அருண் பிரசாத் மோகன் வரவேற்றார். விவேகா மெட்ரிக் பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் நன்றி கூறினார்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் இடம் பெற்ற பள்ளி விராலிமலை விவேக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி வருகின்ற 28-ந்தேதி நடைபெற உள்ளது. அதன்படி காலை 9.30 மணியளவில் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில் போட்டி நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களில் இருவரை மட்டுமே தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே (பள்ளிக்கு ஒருவர் வீதம்) இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வட்டார அளவில் இப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

    போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.

    போட்டிக்கான தலைப்பு போட்டி நிகழ்விடத்தில் நடுவர்கள் முன்பாக அறிவிக்கப்படும். வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
    • தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு

    கரூர்:

    தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கிடையே கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

    முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வே.ஜோதி போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளது. நடுவர்களாக முதுகலை தமிழ் ஆசிரியர்கள் மு.சசிகலா, ரா.தேவி, த.தேன்மொழி, தமிழ் ஆசிரியர்கள் க.விஜயராணி, பி.சரவணக்குமார், ம.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×