search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia World Cup"

    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஸ்பெயின், பனாமா அணிகள் ரஷிய சென்றடைந்துள்ளது.
    ரஷியாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் தொடருக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணி ரஷியா சென்றடைந்துள்ளது. அந்த அணி 2016 யூரோ கோப்பைக்குப் பின் தொடர்ச்சியாக 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டி வருகிறது. ஸ்பெயின் தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் துனிசியாவை வரும் சனிக்கிழமை சந்திக்கிறது.


    பனாமா அணி வீரர்கள் விமானத்தில் இருந்து இறங்கும் காட்சி

    ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை ஜூன் 15-ந்தேதி சந்திக்கிறது. ‘பி’ பிரிவில் இந்த இரு அணிகளுடன் மொராக்கோ, ஈரான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    அமெரிக்கா, ஹோண்டுராஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றுள்ள பனமா அணியும் ரஷிய சென்றடைந்துள்ளது. குரூப் ‘ஜி’ பிரிவில் பனாமா அணியுடன் பலம்வாய்ந்த பெல்ஜியம், இங்கிலாந்து, துனிசியா அணிகள் இடம்பிடித்துள்ளன.
    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான கடைசி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றன. அயர்லாந்து டிரா செய்தது. #WorldCup
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் வரும் 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இதில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது. இதில் 2-0 என இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அல்ஜிரியாவை எதிர்கொண்டது. இதில் போர்ச்சுக்கல் 3-0 என வெற்றி பெற்றது. தென்கொரியா - பொலிவியா ஆட்டம் 0-0 என டிரா செய்தது. உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்ற குட்டி நாடான ஐஸ்லாந்து கானாவை எதிர்கொண்டது. இதில் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்த ஐஸ்லாந்து பின்னர் 2-2 என டிரா செய்தது.



    இங்கிலாந்து உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் துனிசியாவை 18-ந்தேதியும், கோஸ்டா ரிகா 17-ந்தேதி செர்பியாவையும் எதிர்கொள்கிறது. போர்ச்சுக்கல் தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 15-ந்தேதி எதிர்கொள்கிறது.
    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் செக் குடியரசை 4-0 என வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. #worldCup
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்காக 32 அணிகள் தயாராகி வருகின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் செக் குடியரசை எதிர்கொண்டது. இதில் 4-0 என ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஆட்டத்தின் 32-வது மேத்யூ லெக்கி முதல் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் அன்ட்ரிவ் நப்அவுட் ஒரு கோல் அடித்தார். 72-வது நிமிடத்தில் மேத்யூ லெக்கி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலைப் பெற்றது. 80-வது நிமிடத்தில் ஓன் கோலால் மேலும் ஒரு கோல் கிடைக்க ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலயா கடைசியாக 2016 செப்டம்பர் மாதம் அபுதாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 1-0 என வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், டென்மார்க், பெரு ஆகிய அணிகள் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது.
    உலகக் கோப்பைக்கான பிரேசிலின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் நெய்மர் கலந்து கொள்ளவில்லை. #WorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் வருகிற 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. பிரேசில் அணி கேப்டனும், தலைசிறந்த வீரரும் ஆன நெய்மர் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.

    பிரேசில் நாட்டின் தேசிய அகாடமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டனர். அப்போது 100 சதவீதம் காயம் குணமடையவில்லை என்று நெய்மர் கூறியிருந்தார்.

    அதன்பின் பிரேசில் அணி லண்டன் வந்தடைந்துள்ளது. பிரேசில் அணி தனது பயிற்சி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை லிவர்பூலில் குரோசியாகவை எதிர்கொள்கிறது. இதில் விளையாடும் முன்னணி வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அதில் நெய்மர் இடம்பெறவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா? என்பது தெரியவில்லை. பிலிப்பே கவுன்ட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் ஸ்டிரைக்கராக களம் இறங்கினார்கள்.



    முழங்கால் காயம் காரணமாக ரெனாடோ ஆகஸ்டோ குரோசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கமாட்டார் என்று பிரேசில் பயிற்சியாளர் கூறியுள்ளார். ஜூன் 8-ந்தேதி வரை பிரேசில் அணி டோட்டன்ஹாம் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ளும். உலகக் கோப்பைக்கு முன்பு கடைசியாக ஜூன் 10-ந்தேதி ஆஸ்திரேயாவை பிரேசில் எதிர்கொள்கிறது.
    போதை மருந்து உட்கொண்டு தடைபெற்ற பெரு கேப்டன் உலகக் கோப்பையில் விளையாட விளையாட்டுக்கான நடுவர் மன்றம் அனுமதி அளித்துள்ளது.
    பெரு நாட்டு கால்பந்து அணி கேப்டன் பவுலோ கியூரெரோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினாவிற்கு எதிரான விளையாடும்போது டீயில் கோகைன் போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    விசாரணையில் சுவிட்சர்லாந்து பெடரல் கோர்ட் அவருக்கு 6 மாதம் தடைவிதித்தது. இந்த தடை ஜூன் 4-ந்தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும். இதனால் ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் விளையாட தகுதிப் பெற்றார்.

    ஆனால், மேல்முறையீட்டில் அவரது தண்டனை 14 மாதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால் உலகக் கோப்பையைில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் பவுலோ மேல்முறையீடு செய்தார். அதில் தனது 2-வது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு விளையாட்டுக்கான நடுவர் மன்றம் அனுமதி வழங்கியது. இதனால் உலகக் கோப்பையில் பவுலோ கியூரெரோ விளையாடுவதற்கான தடை நீங்கியுள்ளது.
    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ரஷியா தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

    போட்டியை நடத்தும் ரஷியா ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. இதில் 0-1 என ரஷியா தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் ரஷியா பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.



    மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஜப்பான் - கானா அணிகள் மோதின. இதில் ஜப்பான 0-2 எனத் தோல்வியைத் தழுவியது. ரஷியா தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நான்கு போட்டிகளில் 10 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
    ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த சாலா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
    உக்ரைனில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கண்ணீரோடு தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இந்த காயத்தால் அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் எகிப்து அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது வந்தது.

    காயம் அடைந்த முகமது சாலா ‘‘யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் நடைபெற்ற இறுதிப் போட்டி கடினமான இரவாக அமைந்தது. என்றாலும், நான் ஒரு போராளி. நான் ரஷியா சென்று உங்களுக்கு பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவு எனக்கு வலிமையை கொடுக்கும்’’ என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில் லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் பிசியோ, சாலாவின் காயம் குணமடைய மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் சாலா பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எகிப்து முதன்முறையாக 1934-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதிப் பெற்றது. அதன்பின் 56 வருடங்களுக்குப் பின் 1990-ம் ஆண்டு தகுதிப் பெற்றது. தற்போது 28 ஆண்டுகள் கழித்து தகுதிப் பெற்றுள்ளது. எகிப்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    சக வீரர்களுடன் நெய்மர் சிறப்பான வகையில் பயிற்சி மேற்கொண்டதால் பிரேசில் அணி மகிழ்ச்சியில் உள்ளது. #RussiaWorldCup
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும், பிரேசில் அணியின் கேப்டனும் ஆன நெய்மர் பிரான்சின் லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நெய்மருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் தற்போது வரை முன்னணி தொடரில் விளையாடவில்லை.

    கடந்த வாரம்தான் உடற்தகுதி பெற்று போட்டிக்கு தயாரானார். இதனால் உலகக்கோப்பைக்கு தயாராகிவிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் பிரேசில் அணி உலகக்கோப்பைக்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தது. இதில் நெய்மர் கலந்து கொண்டு பயிற்சி எடுத்தார். பிரேசில் அணியின் கடைசி பயிற்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நெய்மர் கலந்து கொண்டு வேகமாக ஓடினார். காலால் பந்தை எளிதாக உதைத்தார்.



    நெய்மர் உடற்தகுதி பெற்று பயிற்சி மேற்கொண்டது அந்த அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா உலகக்கோப்பையில் பிரேசில் ‘ஈ’ பிரவில் இடம்பிடித்துள்ளது. பிரேசில் அணியுடன் சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகளும் அது பிரிவில் இடம்பிடித்துள்ளது.

    உலகக்கோப்பைக்கு முன் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் பிரேசில் அணி குரோசியா, ஆஸ்திரியா அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. 
    பிரான்ஸ் கால்பந்து அணிக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஷினேடின் ஷிடேன் சாதனையை சமன் செய்துள்ளார் ஆலிபர் கிரவ்ட்.
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக தற்போது நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பிரான்ஸ் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. ஆலிவர் கிரவ்ட், நபில் ஃபெகிர் ஆட்டத்தால் பிரான்ஸ் 2-0 என வெற்றி பெற்றது.

    ஆலிவர் கிரவ்ட் முதல் கோலை அடித்ததன் மூலம் பிரான்ஸ் அணிக்காக 72 போட்டிகளில் விளையாடி 31 கோல்கள் அடித்துள்ளார். இதனால் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷினேடின் ஷிடேன் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 4-வது இடத்தில் உள்ளனர்.



    தியெரி ஹென்றி 51 கோல்களுடன் முதல் இடத்திலும், மைக்கேல் பிளாட்டினி 41 கோல்களுடன் 2-வது இடத்திலும் டேவிட் ட்ரேஸ்குயட் 34 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த போட்டியில் முன்னணி வீரரான கிரிஸ்மான் களம் இறங்கவில்லை.

    உலகக்கோப்பையில் பிரான்ஸ் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. பிரான்ஸ் உடன் ஆஸ்திரேலியா, டென்மார்க், பெரு அணிகளும் இந்த பிரிவில் உள்ளன.
    ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடுவராக பணிபுரிய இருந்த நடுவர், மேட்ச் பிக்சிங்கில் வாழ்நாள் தடைபெற்றார். #Worldcup2018
    ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் நடுவராக பணிபுரிய பிபாவால் சவுதி அரேபியாவின் பஹத் அல் மிர்தாசி (வயது 32) தேர்வு செய்யப்பட்டார்.

    சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை கிங்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அல்-இட்டிஹாத் - அல்-பைசாலி அணிகள் மோதின. இந்த போட்டிக்கு மிர்தாசி நடுவராக இருந்தார்.



    அப்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சவுதி அரேபியா கால்பந்து பெடரேசன் அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.

    இதனால் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியில் இருந்து அவரை நீக்குமாறு பிபாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
    ×