search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rock Star"

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #SaamySquare #Vikram
    விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

    இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram

    ×