search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road construction work"

    • மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பிரதான சாலை கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.
    • தற்பொழுது உள்ளாட்சி சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 78- லட்சம் செலவில் சாலை அமைக்க பட உள்ள்து

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ ராமசமுத்திரம் ஊராட்சி காமராஜ் மண்டபத்திலிருந்து சின்னப்பள்ளிபாளையம் ஊராட்சி, பெரியப் பெரியபாளையம் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பிரதான சாலை கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்பொழுது உள்ளாட்சி சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 78- லட்சம் செலவில் சாலை அமைக்க பூமி பூஜை முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் பாபு என்கின்ற சத்தியமூர்த்தி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ம.மருததுரை காட்டுப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவசெல்வராஜ்,

    தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.தங்கவேல் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால ந.திருஞானம் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ். செல்வராஜ் தொட்டியம் பேரூராட்சி மன்றத் தலைவர் சரண்யாபிரபுசின்னப் பள்ளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி பெருமாள் துணைத்தலைவர் கே.குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த சாலையால் காட்டுப்புத்தூர், உன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம் சின்னப்பள்ளிபாளையம் பெரியப்பள்ளிபாளையம் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.


    தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் குண்டியாநத்தம், ஊராட்சிக்கு உட்பட்டது கருவேலம்பாடி, சின்ன கருவேலம்பாடி, மேட்டுவளவு கிராமங்கள். இந்த 3 கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக சாலை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நொச்சிமேடு கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும் இந்தபகுதி மக்கள் அவசரத்துக்கு கூட மருத்துவத்திற்கோ அத்தியாவசிய பொருட்களை வாங்க வர முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் சாலைகள் அமைத்து அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் சாலை வசதி வேண்டுமென்று பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நொச்சி மேடு முதல் கருவேலம்பாடி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 1 கோடியே 54 லட்சம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறையினர் இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க கூடாது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகு தார்சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகு 2022 ஜூலை மாதம் கருவேலம்பாடி கிராமத்திற்கு சாலை அமைக்க அதுவும் 2.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியது.

    இருந்தாலும் 21/2 கிலோமீட்டர் முதலில் சாலை பணியை தொடங்கி விடலாம் என்று ஊராகவளர்ச்சித் துறையினர் ஜூலை 15ஆம் தேதி உதயசூரியன் எம்.எல்.ஏ. வைத்து பூமி பூஜை போட்டு சாலை பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின் சாலை பணிகள் தொடங்கி ஜல்லி கொண்டுவரப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால்மீண்டும் வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான இடம் எது என்று முதலில் அளவீடு செய்து வனத்துறையிடம் காண்பித்து விட்டு அதன் பிறகு நீங்கள் சாலைகள் போட வேண்டும் என்று கூறி வனத்துறையினர் மீண்டும் சாலை பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு இப்போது தான் சாலை வசதி வருகிறது என்று நிம்மதியாக இருந்தனர் ஆனால் அதையும் தடுத்து நிறுத்தி உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

    • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை
    • விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டுகோள்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    இப்பணிகளை ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மேலும் சாலையாக அமைத்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டார்.

    • குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சி பகுதிகளான பாம்பன்பட்டி முதல் சரவணபுரம் வரை உள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் எம்எல்ஏ இரா மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி–களில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி ரூபாய் 41 லட்சத்தில் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சி பகுதிகளான பாம்பன்பட்டி முதல் சரவணபுரம் வரை உள்ள பழுதடைந்த சாலையை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கும்,

    முதலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி ஒத்தக்கடை முதல் பாரதி நகர் செல்லும் சாலை வரை சாலையை மேம்பாடு செய்யும் பணிக்கும் பூமி பூஜை நடந்தது. இதில் எம்எல்ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் தோகைமலை, நாடக்காப்பட்டி, நச்சலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும், பொய்யாமணி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் எம்எல்ஏ இரா மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

    விழாவில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சிஒன்றிய குழு தலைவர் சுபத்ராதேவி ரவிராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி–யன், குளித்தலை மெடிக்கல் மாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கருணாகரன், கள்ள பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 2 கிலோமீட்டர் தூரம் சாலை
    • ரூ.47 லட்சம் மதிப்பிலான சாலை பணிக்கு பூமிபூஜை

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் ராஜாவூரில் இருந்து ஏர்ராம்பட்டி வரை 2, கிலோமீட்டர் தூரம் தமிழக ஊரக சாலையை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.47 லட்சம் மதிப்பிலான சாலை பணியிற்கான பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கந்திலி ஒன்றிய குழு துணைத் தலைவர் மோகன் குமார் தலைமை வகித்தார், பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணியை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் நந்தி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமாறன், முருகம்மா வேலு, ராணி சின்னக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர் ‌ திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சி ரூ 6 லட்சம் மதிப்பிலான நெற்களம் பணியிற்கான பூமி பூஜையைஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

    இதில் கந்திலி ஒன்றிய செயலாளர் கு.ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, பள்ளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி சின்னக்கண்ணு, மற்றும் பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×