search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Realme A1"

    ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டான ரியல்மி தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme #smartphone



    ஒப்போவின் துணை பிரான்டான ரியல்மி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் அறிமுகமான ஆறு மாதங்களில் ரியல்மி பிரான்டு இதுவரை ஐந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமும் செய்துள்ளது. 

    அந்த வரிசையில் ரியல்மி பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி ஏ1 இருக்கும் என தெரிகிறது. ரியல்மி சி1 மற்றும் ரியல்மி 2 வரிசையில் புதிய ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ரியல்மி பிரான்டு தெற்காசிய நாடுகளில் தனது வியாபாரத்தை நீட்டிக்க முயற்சித்து வருகிறது.

    ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போன் ரியல்மி யு1 மாடலை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை ரியல்மி 2 மாடலை விட ரியல்மி ஏ1 அம்சங்கள் மேம்பட்டு இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் எல்லோ என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் வழங்கப்பட்டு இருந்த நிலையில், ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனிலும் இதேபோன்ற வடிவமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருந்தது. அதன் அறிமுக நிகழ்வில் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் கூறும் போது, மீடியாடெக் பிராசஸர் கொண்ட புதிய சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்வோம் என தெரிவித்திருந்தார்.
    ×