search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice smuggling"

    பெரியகுளம் அருகே கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்த முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள ஜி. கள்ளிப்பட்டி அழகர் கோவில் தெரு பகுதியில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவதானப்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பீர்முகமதுவை பெரியகுளம் தென்கரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்த இருந்த 500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில் பீர் முகமது தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும், இவர் மீது அரிசி கடத்தல் சம்மந்தமான வழக்குகள் உள்ளதும், 80வயது முதியவர் என்பதை தனக்கு சாதகமாக்கி கொண்ட பீர் முகமது தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

    பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி வாங்கி அதை ஒன்று சேர்த்து கேரளா மாநிலத்தை சேர்ந்த அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    நூதன முறையில் 2 1/2 டன் ரேசன் அரிசியை கடத்தியை டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய் துறை ஊழியர்கள் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தவிர அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அதன்படி ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் இன்று அதிகாலை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு டெம்போ வேகமாக வந்தது. 

    போலீசார் டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டெம்போவில் காய்கறி இருப்பதாக டிரைவர் கூறினார். மேலும் அதனை காவல்கிணறில் இருந்து தக்கலைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் டிரைவரின் பேச்சில் சந்தேகம் எழுந்ததால் போலீசார் டெம்போவுக்குள் இருந்த காய்கறி கூடைகளை கீழே இறக்கி சோதனை செய்தனர்.

    காய்கறி கூடைகள் கீழே இறக்கப்பட்ட பின்னர் அதன் அடியில் சிறுசிறு மூடைகள் இருப்பதை போலீசார் கண்டனர். அதனை திறந்து பார்த்த போது அதில் ரேசன் அரிசி இருந்தது. மொத்தம் 50 மூடைகளில் 2 1/2 டன் ரேசன் அரிசி இருந்தது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அதனை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து டெம்போவை ஓட்டி வந்த ஏழுதேசம் நகரை சேர்ந்த டிரைவர் சுனில் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் ரேசன் அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் அரிசியை சிலர் மொத்தமாக கொள்முதல் செய்து கேரளாவுக்கு ரகசியமாக கடத்துகின்றனர்.

    கழுதைகள் மூலமும் தோட்ட தொழிலாளர்கள் மூலமும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. அதிகாரிகளின் தீவிர சோதனையால் அது கட்டுபடுத்தப்பட்டது. அதன் பின்பு அரசு பஸ்களில் கடத்தினர். போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தியதால் சில நாட்கள் ரேசன் அரிசி கடத்தல் இல்லாமல் இருந்தது.

    தற்போது மீண்டும் ரேசன் அரிசி கடத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் ரேசன் அரிசிகளை பதுக்கி சிலர் கேரளாவுக்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் கண்ணணுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அதிகாரிகள் வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செடிகளுக்குள் 20 மூட்டைகள் கிடந்தது. அதனை கைப்பற்றி சோதனையிட்டதில் 500 கிலோ ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதிகாரிகள் வந்ததால் பதுக்கல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரேசன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    ×