search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram fishermen"

    டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கி உள்ளனர். #Fishermenstrike #Fishermen

    ராமேசுவரம்:

    டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    தமிழக மீனவர் சங்க செயலாளர் சேசுராஜா தலைமையில் கடந்த 30-ந் தேதி நடந்த கூட்டத்தில் 3-ந் தேதி போராட்டத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை.


    இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படா விட்டால் 8-ந் தேதி உண்ணாவிரதம் இருப்பது என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Fishermenstrike #Fishermen

    இலங்கை சிறைபிடித்த படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் அபராதம் விதிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சிறப்பு சட்டத்தையும் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அண்மையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களின் 3 படகுகளை அந்த நாட்டு நீதிமன்றம் நாட்டுடமையாக்கியது. இது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை கண்டித்தும் நாட்டுடமையாக்கப்பட்ட படகுகளையும், ஏற்கனவே பராமரிப்பிமின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

    இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலைநிறுத்தம் காரணமாக 6 ஆயிரம் மீனவர்களும், மீன்பிடி உபதொழிலை சேர்ந்த 20 ஆயிரம் பேரும் வேலை இழந்து உள்ளனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாழ்வாதாரத்தை ஒடுக்க இலங்கை அரசும் கடும் சட்டங்களை இயற்றி வருகிறது.

    இதனால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போராட்டம் இன்னும் 1 வாரத்துக்கு மேல் தொடரும் என தெரிகிறது. எனவே நாங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளி மாநிலத்திற்கு மீன்பிடிக்க செல்கிறோம் என்றனர். #RameswaramFishermen
    சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடிப்பதும் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவித்தாலும் பறிமுதல் செய்யப்பட்ட 168 விசைப்படகுகளை இலங்கை அரசு விடுவிக்க காலதாமதம் செய்கிறது.

    இந்த நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகளை இலங்கை நீதிமன்றம் நாட்டுடமையாக்கியது. இது ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ராமேசுவரத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். ஏற்கனவே அங்கு எந்த பராமரிப்பு இன்றியும் உள்ள 168 விசைப்படகுகளை காலதாமதமின்றி விடுவிப்பதோடு சேதமான படகுகளுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

    இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் மீனவர்களின் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் நாங்கள் கடலுக்கு உயிர் பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அடிக்கடி இதுபோன்ற வேலை நிறுத்தம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.  #RameswaramFishermen

    சூறாவளி காற்று ஓய்ந்து 9 நாட்களுக்கு பின் ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். #Fishermenboat

    ராமேசுவரம்:

    கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் சீற்றமும் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது.

    மேலும் மீன்வளத்துறை கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனை வழங்க வில்லை. ஒரு வாரமாக இதே நிலை நீடித்ததால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் காற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அறிவித்தது.

    அதன்படி 9 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை அனுமதி டோக்கன் பெற்று ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

    இதனால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் மீண்டும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது. #Fishermenboat

    ராமேசுவரத்தில் அனுமதிச்சீட்டு வாங்காமல் தடையை மீறி சுமார் 6,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #rameshwaramfishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்படம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம்.

    கடந்த 60 நாட்களாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.



    தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல திட்டமிட்ட போது வானிலை மாற்றம் குறுக்கே வந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சூறாவளி காற்று வீசியது. கடல் அலையும் சீற்றமாக இருந்தது.இதனால் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இருப்பினும் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் நேற்று முன்தினம் தடையை மீறி மீன்பிடிக்கச் சென்றனர். வழக்கமாக மீன் பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளுக்கு மீன்வளத் துறை சார்பில் டோக்கன் வழங்கப்படும். அதனை பெற்றுக் கொண்டு தான் மீனவர்களும் கடலுக்குச் செல்வார்கள்.

    ஆனால் வானிலை மாற்றம் காரணமாக அரசு தடை விதித்ததால் மீன்வளத்துறை டோக்கன் வழங்கவில்லை. அதனை பெறாமலேயே குறைந்த அளவு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே நிலையில் நீடிப்பதால் 2-வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. டோக்கன் வழங்க மீன்வளத் துறை மறுத்தது.

    இந்த செயல் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஏற்கனவே தாங்கள் கடலுக்குச் சென்று சுமார் 50 நாட்கள் ஆகி விட்டன. இனி வருமானத்தை பார்க்க வேண்டும் என கூறினர். தொடர்ந்து தடையை மீறி சுமார் 6,500 மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கட லுக்குச் சென்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், அனுமதியின்றி மீன்பிடிக்கச் செல்வது ஆபத்தானது. தடையை மீறி மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #rameshwaramfishermen

    ×