search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan election campaign"

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 5 மாநில தேர்தலில் தான் தற்போது தீவிரமாக உள்ளார். குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகியவற்றின் மீது அதிக கவனம் இருக்கிறது. #BJP #Amitshah
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது.

    இதேபோல 2019-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

    இதனால் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தலாமா? என்ற திட்டத்தில் பா.ஜனதா இருந்தது. தற்போது அதை முழுமையாக கைவிட்டு விட்டது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இந்த 5 மாநில தேர்தலில் தான் தற்போது தீவிரமாக உள்ளார். குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகியவற்றின் மீது அதிக கவனம் இருக்கிறது.

    அதன்படி அமித்ஷா தற்போது ராஜஸ்தானில் பிரசாரம் செய்து வருகிறார். இதர பிற்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் அவர் பிரசார யுக்திகளை மேற்கொண்டுள்ளார்.

    வருகிற 20-ந்தேதி வரை அமித்ஷா ராஜஸ்தானில் பிரசாரம் செய்வார் ஜோத்பூர், அஜ்மீர், உதய்பூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரி வசுந்தராவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து அமித்ஷா தனது பிரசார பயணத்தை மேற் கொண்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில் நேற்று முன்தினம் அமித்ஷா பங்கேற்ற கூட்டம் நடந்தது. அடுத்த 2-வது வாரத்தில் அவர் மீண்டும் தெலுங்கானா செல்கிறார். கரீம்நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

    சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் இந்த 5 மாநிலங்களிலும் அமித்ஷா தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். #BJP #Amitshah
    ×