search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajan chellappa mla"

    காவிரி நதிநீர் வெற்றி விளக்க பொதுக் கூட்டங்கள் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, கழக ஓருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆணையின் படி காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மீட்டெடுத்து சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தின் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசை பாராட்டும் வகையிலும், இந்த சாதனையை கொண்டாடும் வகையிலும் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சட்ட மன்ற தொகுதி வாரியாக காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    நாளை (18-ந்தேதி) திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் நல்லாற்று நடராஜன், தீப்பொறி குருசாமி ஆகியோர் பேசுகின்றனர்.

    19-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மேலூர் தொகுதி யில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சங்கரலிங்கம், தலைமைக்கழக பேச்சாளர் கள் அருணாச்சலம், தென்னவன் ஆகியோரும், 20-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதய குமார், தலைமைக் கழக பேச்சாளர்கள் ராஜேந்திரன், முத்துராமலிங்கம் ஆகியோரும் பேசுகின்றனர்.

    22-ந்தேதி உசிலம்பட்டி தொகுதியில் நடை பெறும் கூட்டத்தில் மகளிர் அணி இணை செயலாளர் சக்தி கோதண்டம், தலைமைக்கழக பேச்சாளர் பண்ணை கருப்பையா பேசுகின்றனர்.

    23-ந்தேதி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் அண்ணாவி, தலைமைக்கழக பேச்சாளர்கள் திருச்சி ஹரிகிருஷ்ணன், கவிஞர் இளையகம் ஆகியோர் பேசுகின்றனர்.

    24-ந்தேதி சோழவந்தான் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டங்களில் இன்னாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக அனைத்து அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர், பேரூராட்சி, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், விவசாய பெருங்குடி மக்கள், செயல்வீரர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×