search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway flats"

    • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் சிவபுரத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் நேற்று மர்ம நபர் ஒருவர் புகுந்தார்
    • அங்குள்ள ஒரு பூட்டிய வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் சிவபுரத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் நேற்று மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அந்த நபர் அங்குள்ள ஒரு பூட்டிய வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கொள்ளை முயற்சி

    இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று மர்ம நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அந்த நபர் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த முருகன்(வயது 45) என்பதும், அவர் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    பராமரிப்பு தேவை

    தற்போது கொள்ளை முயற்சி நடந்த ரெயில்வே குடியிருப்பில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 6 வீடுகளில் மட்டுமே ரெயில்வே ஊழியர்கள் வசித்து வருகின்றனர். மீதம் உள்ள வீடுகளில் யாரும் இல்லாததால் அந்த பகுதி முறையாக பராமரிக்கப்படாமல் முட்செடிகள் முளைத்து கிடக்கிறது.

    சமீபத்தில் அந்த குடியிருப்புகளுக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாகவும், குடியிருப்புகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×