search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price goup"

    இந்தியாவில் தங்கம் விலை எப்போதெல்லாம் உயர்கிறதோ அப்போதெல்லாம் பெண் சிசுக்களின் கொலை அதிகரிப்பதாக மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பின் புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. #India #BabyGirls #GoldRate
    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு ஒன்று, இந்தியாவில் பெண் சிசு கொலையையும், தங்கத்தின் விலை மாறுபாட்டையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1 லட்சம் பிறப்புக்களை ஒப்பீட்டுக்கு எடுத்தது.

    அதன்படி, தங்கம் விலை அதிகரிக்கும் காலத்தில் ஒரு மாதத்துக்கு உட்பட்ட வயதுள்ள பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்தது தெரியவந்துள்ளது. அதே சமயம் தங்கம் விலை அதிகரித்த காலத்தில், ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



    1980-ம் ஆண்டுகளுக்கு பின், ஸ்கேன் வசதியால் கருவிலேயே பல பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால், திருமணத்தின்போது வரதட்சணையாக தங்கம் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. #India #BabyGirls #GoldRate
    ×