search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prevention measure"

    அரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    அரூர்:

    அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக  அரூர் பேரூராட்சி வார்டு எண்.5 பெரியார் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

    இப்பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு கொசுப் புழுக்கள் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு, கொசுப் புகை மருந்து அடிக்கப்பட்டது. உபயோகமற்ற பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இப்பகுதி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. டெங்கு லார்வா கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட பால் கொள்முதல் நிலையம், தனியார் மருத்துவமனை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், அரூர் வருவாய் கோட்ட அலுவலர் புண்ணியக்கோட்டி, துப்புரவு மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 
    ×