search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Picket struggle"

    சோழவந்தானில் இருந்து குருவித்துறை வழியாக உள்ள சாலையை சீரமைக்க கோரி நடத்திய மறியல் போராட்டம் எதிரொலியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
    சோழவந்தான்:

    சோழவந்தானில் இருந்து குருவித்துறை வழியாக சித்தாதிபுரம் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ரூ.7 கோடி நிதி ஒதுக்கி, கடந்த ஆண்டு மே மாதம் சாலை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஓராண்டு ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி, மாவட்ட நிர்வாகி முருகன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்த தகவல் கிடைத்தது. உதவி கோட்ட பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

    சாலை போடும் பணி உடனடியாக தொடங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சாலை போடும் பணி தொடங்கியது. போராட்டம் நடத்திய பின்னர் பணிகளை தொடங்கிய நெடுஞ்சாலை துறையினர் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். #tamilnews
    கன்னிவாடி அருகே சாலைவசதி கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகில் உள்ள மட்டப்பாறை கிராமம், அனுமந்தராயன்கோட்டை, வீரக்கல், மயிலாப்பூர், கரிசல்பட்டி ஆகிய 4 ஊர்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகும். வடக்கு மேட்டுப்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வீரக்கல் வரை 11 கி.மீ. தூரம் கொண்டது. இக்கிராமத்தில் உள்ள கூலித்தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மட்டப்பாறைக்கு நடந்து வந்துதான் பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    கடந்த 5 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று இந்த கிராமத்திற்கு வந்த ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் பள்ளி மாணவ-மாணவிகள் இது குறித்து கோரிக்கை வைத்தனர். சாலை அமைக்க அரசிடம் பறிந்துரை செய்துள்ளதாகவும் அதுவரை தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியன் கீழ் பேட்ஜ் ஒர்க் பணிகள் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று காலை ஆத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் சேதம் அடைந்த சாலைகளை தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள அலுவலர்கள் வந்தனர். ஆனால் அவர்களை பணி செய்ய விடாமல் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

    நிரந்தரமாக தரமான சாலை அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். சுமார் 1½ மணி நேரம் போராட்டம் நீடித்ததால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    கன்னிவாடி இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் ராதிகா, தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. #tamilnews
    ×