search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான் அருகே மறியல் போராட்டம் எதிரொலியாக சாலைப்பணிகள் தொடக்கம்
    X

    சோழவந்தான் அருகே மறியல் போராட்டம் எதிரொலியாக சாலைப்பணிகள் தொடக்கம்

    சோழவந்தானில் இருந்து குருவித்துறை வழியாக உள்ள சாலையை சீரமைக்க கோரி நடத்திய மறியல் போராட்டம் எதிரொலியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
    சோழவந்தான்:

    சோழவந்தானில் இருந்து குருவித்துறை வழியாக சித்தாதிபுரம் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ரூ.7 கோடி நிதி ஒதுக்கி, கடந்த ஆண்டு மே மாதம் சாலை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஓராண்டு ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி, மாவட்ட நிர்வாகி முருகன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்த தகவல் கிடைத்தது. உதவி கோட்ட பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

    சாலை போடும் பணி உடனடியாக தொடங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சாலை போடும் பணி தொடங்கியது. போராட்டம் நடத்திய பின்னர் பணிகளை தொடங்கிய நெடுஞ்சாலை துறையினர் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×