search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to the Collector"

    • வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்
    • நெய்குப்பை கிரமத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில் நெய்குப்பை மீனவர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை கிராமத்தில் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், காலம் காலமாக மீன் பிடிக்கும் சுண்ணாம்பு கால்வாய் பணியும் செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். இந்நிலையில் மீனவர் தெருவில் வசிக்கும் மக்களை இடத்தை காலி செய்யவேண்டும், இது அரசு புறம்போக்கு இடம், இங்கு பால் குளிர்வு நிலையம் அமைக்கப்படவுள்ளது எனவே நீங்களாகவே வீட்டை காலி செய்யவேண்டும், இல்லையென்றால் நாங்களகவே புல்டோசர் வைத்து இடித்து அப்புறப்படுத்துவோம் என பால்பண்ணை தலைவர், செயலாளர், விஏஓ ஆகியோர் எங்களை மிரட்டுகின்றனர். எனவே அதனை தடுத்து மீனவ மக்கள் வசிக்கும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் பெரியப்பட்டி கூட்டு பொறுப்பு விவசாயக் குழு செயலாளா்தேவராஜன் ஒரு மனு கொடுத்தார்.
    • அந்த மனுவில் பெரியப்பட்டி கிராமத்தில் 1.76 ஏக்கா் நிலத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் பெரியப்பட்டி கூட்டு பொறுப்பு விவசாயக் குழு செயலாளா்தேவராஜன் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் அருகே பெரியப்பட்டி கிராமத்தில் 1.76 ஏக்கா் நிலத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி முதல் 2022 ஆகஸ்ட் மாதம் வரையில் இங்கு கற்கள் வெட்டி எடுக்க கனிமவளத்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. ஆனால், உரிமத்தில் வழங்கப்பட்ட விதிகளின்படி கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதில்லை. இதனால் பெரியப்பட்டியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்து வருகின்றன.

    முன்னறிவிப்பின்றி கற்கள் வெட்டப்படுவதால் சுமாா் 3 கி.மீ. தூரத்திற்கு கற்கள் வந்து விழுகின்றன. பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. விவசாயமும் சரிவர செய்ய முடியவில்லை. குழந்தைகள் உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட கல்குவாரியை சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டுவதற்கும், உரிம விதிகளை பின்பற்றவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • இப்பகுதியில் செங்கல் சூளை அமைந்தால் புகை, அதிக வெப்பம் ஏற்படும்
    • காற்று மாசு ஏற்பட்டு பெண்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்

    கரூர்:

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரூர் ஒன்றியக்குழு சார்பில், கரூர் ஒன்றியச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவில், கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் கோம்புபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முத்தனூர். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடியிருப்புக்கு அருகில் செங்கல் சூளை அமைக்க தனிநபர் ஒருவர் முயற்சித்து வருகிறார்.

    இப்பகுதியில் செங்கல் சூளை அமைந்தால் புகை, அதிக வெப்பம் ஏற்படும். இதனால் காற்று மாசு ஏற்பட்டு பெண்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும், இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். எனவே, குடியிருப்பு பகுதியில் செங்கள் சூளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தனூர் கிராம பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.

    குடியிருப்பு பகுதியில் செங்கல்சூளை அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைத்தால் பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • மணல் குவாரி அமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொடுத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 351 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 1,500 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது மணல் குவாரி செயல்படாததால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாடுகளுக்கு தீவனம் கூட வாங்கி போட முடியவில்லை. குடும்ப செலவிற்கு பெரிதும் அல்லாடும் சூழ்நிலை உள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை காக்க மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    இளைஞர்கள் சிலர் கொடுத்த மனுவில், குழுமூரில் நீட் தேர்வால் இறந்த அனிதாவின் நினைவாக நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அறிவு சார் திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித்தேர்வுகளுக்கு இங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் தங்கி படித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு இல்லாததால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    கூட்டத்தில் மனு அளிக்க வந்த மக்களுக்கு ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு குறித்த மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.

    • ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளிக்கப்படுகிறது

    திருச்சி :

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவு அடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வரி மற்றும் சொத்து வரியை உயர்த்தியது. தற்போது மீண்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    கடந்த மூன்று, நான்கு வருடமாக கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறுந்தொழில்கள் நசிந்து மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின்சாரத்துறை அமைச்சர், சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி வாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும், அதனால் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

    இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மாமனார் இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதை பதிவு செய்து வைத்திருப்பதாக மருமகள் தகவல்
    • மாமனாருடன் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சேர்ந்து மிரட்டுகின்றனர்.

    கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர்வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணி போல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன்என்று மிரட்டினார்.

    இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான்என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.

    இது சம்மந்தமாக கடந்த 08-04-2022 அன்று  08.04.௨௦௨௨காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.

    எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டு மிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தை களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×