search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி த.மா.கா. சார்பில் 25-ந் தேதி திருச்சி கலெக்டரிடம் மனு
    X

    மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி த.மா.கா. சார்பில் 25-ந் தேதி திருச்சி கலெக்டரிடம் மனு

    • ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளிக்கப்படுகிறது

    திருச்சி :

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவு அடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வரி மற்றும் சொத்து வரியை உயர்த்தியது. தற்போது மீண்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    கடந்த மூன்று, நான்கு வருடமாக கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறுந்தொழில்கள் நசிந்து மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின்சாரத்துறை அமைச்சர், சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி வாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும், அதனால் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

    இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×