search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old currency"

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.1½கோடி செல்லாத நோட்டு கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #oldcurrency

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு போலீஸ் அதிகாரி சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை சாவக்காடு வடக்கு பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆடம்பர கார் வேகமாக வந்தது.

    கார்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். இரண்டு கார்களிலும் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. இதில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1½ கோடி பணம் இருந்தது. பணம் மற்றும் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து பணம் கடத்தியவர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோவை கரும்புக்கடை பள்ளி வீதியை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 33), கோவை மீன்கடை சந்து நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தாஜ்சுதீன் (37), கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த நிசாத் (29), பாலக்காடு பரளியை சேர்ந்த கபீப் (50), வடக்கஞ்சேரியை சேர்ந்த சம்சுதீன் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் அவர்கள் கூறும்போது, கோவையில் உள்ள ஒருநபர் இந்த பணத்தை கொடுத்து ஒரு செல்போன் எண்ணையும் கொடுத்தார். எர்ணாகுளம் சென்று போனை தொடர்பு கொண்டால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பணத்தை பெற்றுக்கொள்வார் என்று கூறினார். அதற்கு கமி‌ஷனாக ரூ.30 லட்சம் கமி‌ஷனாக தருகிறேன் என்றார். அதன்படி கடத்தி வந்தோம் என்றனர்.

    இதனையடுத்து அவர்களை போலீசார் கைதுசெய்தனர். மேலும் கோவையை சேர்ந்த அந்த நபர் யார்? எர்ணாகுளத்தில் பணத்தை பெற்றுக்கொள்ள இருந்த நபர் யார்? செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இனி மாற்ற முடியாது என்று நிலையில் எதற்காக ரூ.1 ½கோடி பணத்தை கடத்த வேண்டும் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சாவக்காடு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர். #oldcurrency

    ×