search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officer Inspection"

    • 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம்
    • திட்டத்தின் பலன்களை விரிவுப்படுத்த ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை மூலம் செயல்படுத்தப்படும் கரும்பு மேம்பாட்டுத் திட்டப்பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

    வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் , கரும்பு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், நடைமுறையில் கரும்பு கரணைகளை வெட்டிப் பயிரிடும் முறையால் ஏக்கருக்கு ரூ.12,000 அளவுக்கு, அதாவது 4 டன் கரும்புகள் செலவாகிறது. இதைத் தவிர்க்க கரும்பு பருசீவல் நாற்றுகள் தயார் செய்து அளிக் கப்படுகிறது.

    இதன் மூலம் ஒரு டன் கரும்பு மூலம் ரூ.3,500 செலவில் 5,000 நாற்றுகள் உற்பத்தி செய்து அளிக்கப்படுகிறது. தவிர, கரும்பு ஆராய்ச்சி பனைகளில் இருந்து ஏக்கரைக்கு 60 டன் கரும்பு விளைச்சலை அதிகரிக்க கூடிய புதிய கரும்பு ரகங்களும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்படுகின்றன.

    இந்த திட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள் குறித்தும் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் கள ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி வட்டாரத்துக்குட் பட்ட ஏரந்தாங்கல் கிராமத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் தோட்டங்களில் அவர் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், திட்டத்தின் பயன்களை மேலும் விரிவுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது, துணை இயக் குநர் (சொட்டுநீர் பாசனம் ) ஆர் . விஸ்வநாதன், காட்பாடி வட்டார வேளாண்மை அலுவலர் முருகன், சர்க்கரை ஆலை கரும்பு மேம்பாட்டு அலுவலர் மு.வேலாயுதம், ஆலைப்பகுதி கரும்பு அலுவலர் எம்.சக்திவேல், கரும்பு மேம்பாட்டு உதவியாளர் சி.ஆப்ரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டுரங்கில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தனிச்செயலாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமை வாங்கினர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    மேலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவும் அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதனை உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்து துறை அலுவலர்களும் திறம்பட செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கருமருது உட்பட, 28 வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • இலக்கு முழுவதையும் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    அவிநாசி:

    அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நடுவச்சேரி ஊராட்சியில் நர்சரி அமைக்கப்பட்டு, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் நாற்று உற்பத்தியும், பராமரிப்புப்பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அங்கு புங்கை, புன்னை, ஆனை குன்றிமணி, சேத்தான் குட்டை, வில்வம், ஆலமரம், புளியமரம், சிவகுண்டலம், மந்தாரை, உதியன், பூவரசன், வன்னி, மகிழம்பூ, தான்றிக்காய், விதைப்பந்து, குறிஞ்சிக்காய், பாதானிக்காய், முருங்கை, கொடுக்காப்புளி, அத்தி, அலுஞ்சி, கருமருது உட்பட, 28 வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுணன், நர்சரி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். ஆண்டுக்கு 15 ஆயிரம் மரக்கன்று என்ற அடிப்படையில் 3 ஆண்டில் 50 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்ய இலக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 20 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே, இலக்கு முழுவதையும் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது அவிநாசி பி.டி.ஓ.,க்கள் மனோகரன், விஜயகுமார், செயற் பொறியாளர்கள், ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    • ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்தது வருகிறது
    • 2 இடங்களில் புதிதாக விடுதி கட்ட மனு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்தினை அதன் தலைவர் மதிவாணன் நேற்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் செயல்பாடு எப்படி மாணவர்களின் கல்வித் திறன் எப்படி உள்ளது மேலும் கட்டிடத்தின் வசதிகள் குறித்து புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்கள் பார்வையிடுவதற்காக இங்கு வந்துள்ளேன்.

    தற்போது பட்டறை காடு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும் ஆட்டியானூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பு வரை கொண்ட கட்டிடமும் அரசு பழங்குடியினர் நல ஒன்று உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் மூன்று வகுப்பறை கட்டிடம் ரூ. 51.60 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மலைவாழ் மக்களின் வாழ்க்கை திறன் உயர்வதற்காக தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காக வரும் செவ்வாய்க்கிழமை ஜமுனாமரத்தூர் யூனியன் அலுவலகத்தில் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துப் பகுதி மக்களையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் போடப்பட்டு அதன் மூலம் யார் யாருக்கு என்னென்ன தொழில் செய்ய வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் வங்கிகள் மூலம் 50 சதவீத மானியத்தில் கடன் உதவி அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

    மேலும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மற்றும் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவிடமும் 2 இடங்களில் ஹாஸ்டல் புதிதாக கட்டுவதற்கும் மேலும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் மனு கொடுத்து உடனடியாக பணிகளை செய்து முடிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

    ஆய்வின் போது எம்எல்ஏ சரவணன், வேலூர் மாவட்ட தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர்கள் இமாம்காசிம், கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, யூனியன் சேர்மன் ஜீவா, துணைச் சேர்மன் மகேஸ்வரி, பிடிஓ பிரகாஷ் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அலங்காநல்லூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை மற்றும் சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமைக்கு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு திடல் அமைய உள்ள இடத்தை முதல்-அமைச்சரின் முதன்மை தனி செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இங்கு விரைவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.

    ×