search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தில் அதிகாரி ஆய்வு
    X

    அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைய உள்ளது. அதனை முதல்-அமைச்சரின் முதன்மைச் செயலர் 

    உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தில் அதிகாரி ஆய்வு

    • அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமையும் இடத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அலங்காநல்லூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை மற்றும் சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமைக்கு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு திடல் அமைய உள்ள இடத்தை முதல்-அமைச்சரின் முதன்மை தனி செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இங்கு விரைவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.

    Next Story
    ×