search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navratri festival"

    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவி லில் நவராத்திரி விழா வருகிற 26 - ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு 26 - ந் தேதி முதல் 5 - ந் தேதி வரை தினமும் காலை, மாலை இருவேளை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.

    உற்சவ அம்மன் கோவில் மகா மண்டபத்தில் கொலு வைத்து, 25-ந் தேதி பார்வதி அலங்காரம், 26-ந் தேதி காமாட்சி அலங்காரம், 27-ந் தேதி மாவடி சேவை அலங்காரம், 29-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 30-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 1-ந் தேதி துர்க்கை அலங்காரம், 2-ந் தேதி அன்ன பூரணி அலங்காரம், 3-ந் தேதி தனலட்சுமி அலங்காரம், 4-ந் தேதி சரஸ்வதி அலங்காரம், 5-ந் தேதி திருஅவதார அலங்காரத்துடன் இரவு 8.30 மணி அளவில் பாரிவேட்டை உற்சவம், திருவீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞா னம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் கண்ணமங்க லம் புதுப்பேட்டை சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 26-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இதைமுன்னிட்டு அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் உற்சவ அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    இதைமுன்னிட்டு நேற்று கோவிலில் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழா குழுவினர் கே.டி.குமார் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.
    • 5-ந்தேதி வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டா டப்படும் முக்கிய திருவிழா க்களில் ஒன்று நவராத்திரி விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.

    விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்திசொற்பொழிவு, மங்கள இன்னிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர் 2.45 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்ய ப்படும். 5-ந்தேதி வழக்க ம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • கொலு செட் பொம்மைகள் 150 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

     திருப்பூர்:

    அம்பிகையை தினமும் ஒவ்வொரு வடிவில் வழிபடும், நவராத்திரி விழா புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு வருகிற 25ல் நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவின் 9-வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 10வது நாள், விஜய தசமியாகவும் வழிபடப்படுகிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்தும் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதற்காக 9 கொலு படிகள் அமைத்து பொம்மைகளை அலங்கரித்து வழிபாடு நடத்தப்படுகிறது.நவராத்திரி விழா துவங்க உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.மண் பாண்ட விற்பனைக்கடைகளில் மண்ணால் செய்யப்பட்ட, சுவாமிகளின் சிலைகள் மற்றும் பறவை, மனிதர்கள் என அனைத்து வகையான சிலைகள் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

    இதில் தசாவதாரம், திருமணம், அஷ்டலட்சுமி, ஆண்டாள், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, திருமண நிகழ்வு, கல்யாண சீர்வரிசை, தசாவதாரம், படகு, கிருஷ்ணவதாரம் என பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் வகையில் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.மேலும் சிவன், பார்வதி, முருகன், விநாயகருடன் கைலாயத்தில் அமர்ந்திருக்கும் காட்சி கொண்ட பொம்மை, சரவணப்பொய்கையில் தாமரை மீது முருகன் அவதரித்த கோலம், ராவணன் ஆட்சி மன்றக்கூடம் எனகுழந்தைகள், விலங்குகள், பறவைகள், தலைவர்கள் என பலவித பொம்மைகள் தனித்தனியாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.தனி கொலு பொம்மைகள் 50 முதல் 600 ரூபாய் வரையிலும், கொலு செட் பொம்மைகள் 150 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ×