search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navratri festival"

    • விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது.
    • 14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும்.

    தக்கலை:

    திருவாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் வருடம் தோறும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையிலுள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் சென்று வருகின்றன.

    ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன்பிறகு 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்பாடு மற்றும் வருகையின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்பதும் வழிபடுவதும் உண்டு. இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னுதித்த நங்கையம்மன் அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் பத்மனாபபுரம் அரண்மனையை வந்தடைந்து. இன்று காலை அங்கு வேளிமலை முருகனும் பக்தர்கள் புடைசூழ வந்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் ஸது எடுத்து தொல்பொருள் துறை இயக்குனர் தினேஷிடம் ஒப்படைத்தார்.

    அதனை அவர், கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடம் இருந்து இதனை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் பெற்றுக்கொண்டார். விழாவில் மத்திய மந்திரி முரளிதரன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன். கேரள எம்.எல்.ஏ.க்கள் வின்சென்ட், ஹரீந்திரன், ஆன்சலன், மற்றும் நகர் மன்ற ஆணையாளர் லெனின், தலைவர் அருள் சோபன், துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் அரண்மனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் முன்னே செல்ல வேளிமலை முருகன் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர்ந்து பவனி சென்றனர்.

    இந்த சாமி ஊர்வலத்தில் தமிழக-கேரள போலீசார் மற்றும் திரளான பக்தர்கள் நடந்து சென்றார்கள். 3 சாமி சிலைகளும் இரவில் குழித்துறையில் தங்கிவிட்டு, நாளை (13-ந்தேதி) காலையில் அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும். அங்கு மூன்று சாமி சிலைகளுக்கும் கேரள அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்.

    14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை பூஜை புரை என்ற இடத்தில் பூஜைக்காக வைப்பார்கள். வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    இதை தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டத்தை நோக்கி புறப்படும்.

    • நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சுவாமிமலை:

    ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

    விழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு வைத்து வழிபடுவர்.

    அதேபோல், ஏராள மானோர் தங்கள் வீடுகளில் 5,7,9,11 ஆகிய எண்ணிக்கையிலான படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து பக்தி பாடல்கள் பாடி, அக்கம் பக்கத்தினர், உறவினர்கனை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்குவர்.

    விழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பாபு ராஜபுரத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ள தினேஷ் என்பவர் கூறுகையில்:-

    கொலுவிற்கு தேவை யான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகள், பேப்பர் பொம்மைகள், 3 இன்ச் முதல் 7 அடி வரை உயரம் கொண்ட 63 நாயன்மார்கள் செட், தசவதார பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் ரூ.10 முதல் 7 ஆயிரம் வரை விற்பனைக்கு வைத்துள்ளேன்.

    மேலும், இந்த பொம்மைகள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசைக்கு மறு நாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அப்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். வீடுகளில் அமாவசை தினத்தன்றே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு கொலு பொம்மைகள் வைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும்.

    நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடு செய்து பிரசாதங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தற்போதே விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது. அஷ்டலட்சுமி, கார்த்திகை பெண்கள், தசாவதாரம், மீனாட்சி திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட செட் பொம்மைகள், மகாத்மா காந்தி, பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பொம்மைகளும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    வருடந்தோறும் புதுவகையான செட் பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த நவராத்திரிக்கு ஐஸ்வர்ய ஈஸ்வரன், நவ நரசிம்மர், தத்தாத்ரேயர் என்ற புதிய செட் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து பெண்கள் கூறுகையில், நவராத்திரி விழா பெண்கள் வழிபட கூடிய முக்கிய விரதங்களில் ஒன்று. 9 நாட்கள் விரதமிருந்து, ஏழை எளியவர்களுக்கு முடிந்ததை தானம் செய்து வழிபடும் போது குடும்பத்தில் சுபிட்சம் மற்றும் செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு அமையும் என்பது ஐதீகம். அதனால் நவராத்திரி விரதத்தை பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்க–ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆரா–தனைகள் நடத்தப்பட்டன. பக்தர்க–ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • திரைப்பட இயக்குனருக்கு ‘ஆத்மீக பால ரத்னா’ விருது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு, 'ஆத்மீக பால ரத்னா' விருதை கவிஞர் நெமிலி எழில்மணி வழங்கி பாராட்டினார்.

    அவர் தயாரித்து வெளி யான மாமனிதன் எனும் திரைப்படத்தில், கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்து - ரைத்தார். தனக்கு அளிக் கப்பட்ட பட்டம் மனித நேயத்துக்கு அளிக்கப்பட்ட மதிப்பு என இயக்குனர் சீனுராம்சாமி குறிப்பிட்டார்.

    அப்போது, குருஜி நெமிலி பாபாஜி தாம் எழுதிய ஆத்மீக நுால்களை அவருக்கு பரிசாக வழங்கினார். விழா ஏற்பாடுகளை நெமிலி ஆத்மீக குடும்பத் தினர் செய்திருந்தனர்.

    • அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    திருச்சி:

    முசிறி திருச்சி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.

    நவராத்திரி ஏழாம் நாள் விழாவான நேற்று உண்ணாமலை அம்மன் உற்சவம் மலர் அலங்காரத்தில் லலிதாம்பிகை அம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி கமல் மற்றும் நிர்வாகிகள் மனோகரன் ரவிச்சந்திரன் காஞ்சனா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.


    • சிவலிங்க ஆலிங்கண பூஜை நடைபெற்றது
    • மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 26-ம்தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் உற்சவ அம்மனை கொலு வைத்து நேற்று முன்தினம் 27-ம்தேதி காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது.

    தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசா தங்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த 27-ம்தேதி மாலை ஸ்ரீ மீனாட்சி நாட்டியக் குழு மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. நாட்டியக் குழுவினருக்கு கோவில் சார்பில் செயல் அலுவலர் சிவஞானம்,மேலாளர் மகாதேவன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் சான்றிதழ்கள், பிரசாதங்கள் வழங்கினர்.

    மேலும் நான்காம் நாளான நேற்று 28-ம்தேதி அம்மனுக்கு சிவலிங்க ஆலிங்கண பூஜை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வேலூர் ஸ்ரீகிருஷ்ணா மந்திர் மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    • தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை சுமங்கலி பூஜை சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகிறது.
    • 9 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அம்மன் குளக் கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான பத்திர காளி அம்மன் என்ற ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.

    தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை சுமங்கலி பூஜை சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகிறது. 9 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீ பத்ரகாளி அம்ம னுக்கு தினம்தோறும் நண்பகல் வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பல்வேறு மங்களப் பொருட்களைக் கொண்டு வித விதமான அலங்காரங்கள் செய்யப்படு கிறது நேற்று காய்கறிகளை கொண்டு அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சாகம்பிரியாள் சுவாமியாக காட்சி தந்தார்.இதனால் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை வேளையில் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இதுகுறித்து தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், இங்கு கடந்த 24 வருடங்க ளாக நவராத்திரி விழா கொலு வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வரு கிறது. தினந்தோறும் பூஜைகள் நிறைவடைந்த பிறகு பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார்.

    • நவராத்திரி விழா தொடங்கியது.
    • அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. நவராத்திரியை முன்னிட்டு அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனை கோவிலுக்கு அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொலுமண்டபத்தில் எழுந்தருளிய விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சோடச உபசாரங்கள் நடைபெற்றன. விசாலாட்சி அம்மனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.
    • தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். கோவில் வளாகத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு காலை திருமுறை இசை நிகழ்ச்சியும், பரதநாட்டி யமும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நவராத்திரியின் மகிமை என்ற ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. 8.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது.

    நாளை (27-ந்தேதி) அம்மனுக்கு கோலாட்ட அலங்காரமும், 28-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந்தேதி ஊஞ்சல் அலங்காரமும், அக்டோபர் 1-ந்தேதி அர்த்த நாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந்தேதி தண்ணீர்பந்தல் வைத்தல் அலங்காரமும்,3-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந்தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும், 5-ந்தேதி விஜயதசமி சடையலம்புதல் அலங்காரமும் செய்யப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் அரு ணாச்சலம், உதவி ஆணையர் யக்ஞநாராயணன் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகி யோர் செய்துள்ளனர்.

    இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மதுரையில் வீடுகளிலும் பெண்கள் கொலு அமைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26 -ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

    வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வான வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதைத்தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும் மற்றும் பஞ்ச மூர்த்தி களுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.

    தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும் 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசுர மர்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.

    மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.மாலை சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடக்கிறது.
    • மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம்அருகில் உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடக்கிறது.வரும் 27 ந்தேதி பிரம்மச்சாரிணி அலங்காரமும் மாலை 5:30 மணிக்கு உமா நந்தினி பக்தி இன்னிசையும் நடக்கிறது. 28 ந்தேதி சந்திரகாந்தா அலங்காரம் மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வியாழக்கிழமை குஷ்மந்தா அலங்காரம் மாலை உமா நந்தினியின் சூழலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் நாள் (வெள்ளிக்கிழமை) ஸ்கந்த மாதா அலங்காரமும் மாலை சொர்ணாலயா நாட்டியாஞ்சலி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி கார்த்தியாயினி அலங்காரமும் மாலை ரிதம் இசைப்பள்ளி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    7-ந்தேதி கால் ராத்திரி அலங்காரமும் மாலை பரதநிகழ்ச்சியும் நடக்கிறது. 8ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 8 ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்னர் வீல் கிளப்பினர் செய்து வருகின்றனர்.

    ×