search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marry"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தான் விரும்பியதாக இந்தி நடிகை கரீனா கபூர் தான் எழுதிய புத்தகத்தில் தெரிவிதுள்ளார். #KareenaKapoor #RahulGandhi #Marry
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது.

    ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார். இந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அவர், சோனியா காந்தி குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.

    இரு குடும்பங்களைப் பற்றியும் தான் எழுதிய புத்தகத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டுவாக்கில், இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்துள்ளன. அப்போது, ராகுல் காந்தி, எம்.பி. ஆகவில்லை. அவர் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய கரீனா கபூர், ராகுலுடன் ஊர் சுற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

    அதுபோல், ராகுல் காந்தியும் நடிகை கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். முதல் நாளிலேயே அந்த படங்களை பார்த்து விடுவார் என்று அந்த பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

    ஆனால், இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார். “அவை அனைத்தும் இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகிய கடந்த கால நிகழ்வுகள்” என்று அவர் கூறினார்.  #KareenaKapoor #RahulGandhi #Marry
    வில்லியனூரில் திருமணம் செய்வதாக பெண்ணிடம் நகை மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாப் பேட்டை புதுநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கவிதா (வயது 24). இவருடன் அரியாங்குப்பம் அருகே தமிழக பகுதியான சின்ன இரிசாம் பாளையத்தை சேர்ந்த பலராமன் மகன் அய்யனாரப்பன் (27) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

    அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி கவிதாவிடம் இருந்து சிறுக, சிறுக 18 பவுன் நகையை அய்யனாரப்பன் வாங்கி சென்றார்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு அய்யனாரப்பனிடம் கவிதா வற்புறுத்திய போது, அய்யனாரப்பன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து நகையை திருப்பி கேட்டபோது, கவிதாவை கொலை செய்து விடுவதாக அய்யனாரப்பன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கவிதா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் விசாரணை நடத்தி அய்யனாரப்பன் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

    மூலகுளத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தொப்புளான். இவரது மனைவி அகஸ்தினி (வயது 56). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே 2 மகள் மற்றும் இளைய மகனுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் மூத்த மகன் செந்தமிழனுக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை. இதனால் அகஸ்தினி மனவேதனையில் இருந்து வந்தார்.

    மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததை பலரிடம் கூறி அகஸ்தினி வருத்தப்பட்டு வந்தார். நேற்று மகன் வேலை முடிந்து வீடு திரும்பியதும் செந்தமிழனிடம் திருமணம் பற்றி அகஸ்தினி பேசினார். அப்போது செந்தமிழன் இனிமேல் திருமணம் பற்றி யாரும் பேச வேண்டாம் என கூறி விரக்தியுடன் வீட்டின் மாடிக்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த அகஸ்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தொப்புளான் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அகஸ்தினியை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அகஸ்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×