search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry seized"

    நச்சலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    நச்சலூர்:

    நச்சலூர் பகுதியில் சிலர் மண் கடத்துவதாக வருவாய் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து நங்கவரம் வருவாய் ஆய்வாளர் கணேசமூர்த்தி, நச்சலூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சோதனை நடத்தினர்.

    அப்போது கள்ளை ஆற்று வாரியில் டிராக்டரில் மண் அள்ளி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மண் கடத்திய டிராக்டரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணையில், மண் கடத்தியது டிராக்டரை ஓட்டிவந்த நச்சலூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்த அங்கப்பன் மகன் வினோத்குமார்(வயது 27) என தெரியவந்தது. பின்னர் டிராக்டரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 
    திண்டுக்கல்லில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், மணிவண்ணன் மற்றும் பணியாளர்கள் கரூர் சாலை விட்டல்நாயக்கன்பட்டி, வத்தலக்குண்டு பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த 3 லாரிகளை மறித்து சோதனையிட்டபோது அதில் அளவுக்கு அதிகமாக பாரங்கள் ஏற்றியது தெரிய வந்தது. இதனால் அதிகாரிகள் 3 லாரிகளுக்கும் அபராதம் விதித்தனர். ஒரு லாரி மட்டும் ரூ.17 ஆயிரம் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டது.

    அபராதம் செலுத்தாத மற்ற 2 லாரிகளை பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் ஆம்னி பஸ்களில் ஏர்ஹாரன் அதிக ஒளியுள்ள விளக்கு பயன்படுத்தியவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும். விதிமீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    விளாத்திகுளம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் மற்றும் கிளனரை கைது செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சூரங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவில் சூரங்குடி மெயின் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் விளாத்திகுளம் அருகே விரிசம்பட்டி வைப்பாற்று படுகையில் இருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    எனவே லாரி டிரைவரான தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் முனியசாமி (வயது 32), கிளனரான வேம்பு மகன் இசக்கிமுத்து (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி உரிமையாளரான மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், பன்னீர்செல்வம், தீபன்ராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
    திருவாடானை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனார்.
    தொண்டி:

    திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சி அருகே உள்ள மல்லனூர் ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மல்லனூர் கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்வரமூர்த்தி தொண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டர்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஒரு ஜே.சி.பி. எந்திரம், ஒரு டிராக்டர், ஒரு டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மூப்பையூர் பிரசாத் (வயது 26), ஆண்டிப்பட்டி தாலுகா பிச்சபட்டி பாண்டி(20), சேனவயல் ராமு (40) ஆகியோர் மீது தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிச்சாமி, முத்துவேல் ஆகியோர் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் மல்லனூர் உடையார், மணிமுத்து, எம்.ஆர்.பட்டணம் மகாலிங்கம், கோவிந்தமங்கலம் நாகேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 
    விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    விராலிமலை:

    விராலிமலை ஆற்றுப்படுகைகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ராசநாயக்கன்பட்டியில் உள்ள டோல் பிளாசா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அதன்பேரில், லாரியின் உரிமையாளரான கன்னியாகுமரி மாவட்டம் மருதகாட்டுவில்லையை சேர்ந்த ராஜசெல்வன்(வயது 29) மற்றும் லாரி டிரைவர் மார்த்தாண்டத்தை சேர்ந்த மணியன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல விராலிமலை தாசில்தார் பார்த்திபன், விராலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 
    சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் எசனைக்கோரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஓட்டி வந்த எசனைக்கோரையை சேர்ந்த மாரிமுத்து மகன் பனையடியான்(வயது 32), சின்னத்தம்பி(43), மேலவாளாடியைச் சேர்ந்த அசோக்குமார்(46) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 
    கடலூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து கோவைக்கு மணல் கடத்திய 4 லாரிகளை மந்தாரக்குப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக 7 டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் நாலு மணல் லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    பின்னர் 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி கொண்டு கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 லாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் மணல் கடத்தல் தொடர்பான வேறு யாரேனும் இதில் தொடர்பு உள்ளார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வழியாக மணல் கடத்தி கொண்டு வெளியூருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
    மோகனூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மோகனூர்:

    மோகனூர் அருகே உள்ள எல்லைக்காட்டு புதூர் பகுதியில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை சோதனை செய்தனர்.

    இதில் லாரிகளில் மணல் அள்ளி கடத்துவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டாரஸ் லாரி ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யபட்டது. வட்டூர் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் பழனிசாமி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஓமலூர் அருகே உள்ள செட்டிபட்டியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ரவி, வட்டூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜா, மணல் அள்ளிய எல்லைக்காட்டுபுதுரைச் சேர்ந்த குப்பன் மகன் முருகன் (43), லாரி உரிமையாளர் ஓமலூர் செட்டிபட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கஸ்தூரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் பழனிசாமி நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 
    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலிகான் மணல் கடத்திய 7 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக லாரிகளில் சிலிகான் மணல் கடத்துவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்படி தனிப்படை போலீசார் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் ஆகியோர் தலைமையில் அண்ணா சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தார்பாயால் மூடப்பட்ட நிலையில் 7 லாரிகள் வரிசையாக சென்றன. சந்தேகத்தின் பேரில் போலீசார் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது பீங்கான் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிலிகான் மணல் இருந்ததை கண்டுபிடித்து அந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    லாரி டிரைவர் ஒருவர் தப்பி ஓடி விட்டார். 6 டிரைவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்த பிரபு (21), ராகவேந்திரன் (24), செங்குன்றத்தைச் சேர்ந்த சேது (21),ஹாஜி (21), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஏகாம்பரம் (35), தேர்வாயைச் சேர்ந்த அஜித் (21) என்று தெரிய வந்தது.

    ஆந்திராவில் உள்ள கூடூரிலிருந்து சென்னைக்கு சிலிகான் மணல் கடத்த முயற்சி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    தலைவாசல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தலைவாசல்:

    தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பிரிவு ரோட்டில் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பாஜிதீன், கலியமூர்த்தி ஆகியோர் மணல் கடத்தப்படுகிறதா? என வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் லாரி டிரைவர் சிறுவாச்சூரை சேர்ந்த ராகுல் என்பதும், லத்துவாடியில் உள்ள சுவேத நதியில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வீரகனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தினர். மேலும் லாரி டிரைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

    இதே போல தலைவாசல் அருகே வேப்பம்பூண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தியது தெரியவந்தது. அந்த ஆட்டோவை கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் மடக்கி பிடித்து, அதனை பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தினார். மணல் கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பீங்கான் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிலிக்கான் மணலை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நித்தியானந்தம், வேலு, ஏட்டு ரவி ஆகியோர் இன்று காலை அண்ணா சிலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வரிசையாக வந்த 4 லாரிகளை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் லாரிகள் நிற்காமல் சென்றன.

    சந்தேகம் அடைந்த போலீசார் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று அம்பேத்கார் நகர் பகுதியில் 4 லாரிகளையும் மடக்கி நிறுத்தினர். லாரிகளில் சோதனை செய்த போது அதில் பீங்கான் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிலிக்கான் மணல் இருந்தது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

    லாரி டிரைவர்கள் செங்குன்றம் அருகே உள்ள காரனோடையை சேர்ந்த ராஜி, காளகஸ்தியை சேர்ந்த ஹரி, கூடூரை சேர்ந்த சாய் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தத்தனூர் மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், அதே பகுதியில் உள்ள ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அன்பழகனை (வயது 40) கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். 
    ×