search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry seized"

    திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்களை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீசார் கானாடுகாத்தான் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். இதைப்பார்த்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவரை தேடிவருகின்றனர்.

    இதேபோல சிவலங்குடி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த குளத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாசை (வயது 35) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தலைமையிலான போலீசார் நேற்று திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமறம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி புதுக்கோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, புதுக்கோட்டையைச்சேர்ந்த செந்தில்குமார் (32), காளையார்கோவில் அருகே உள்ள புல்லுக்கோட்டையைச்சேர்ந்த ரஞ்சித்(26) ஆகிய இருவரையும் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நகர் போலீசாரிடம் ஒப்புடைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு மணல் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்பபடுவதாக புகார் வந்தது. இதையடுத்து ரோந்துப் பணியை தீவிரப்படுத்த போலீசார் அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் நேற்று கொற்றிக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அவர்கள் சித்திரங்கோடு பகுதியில் வரும்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியில் மணல் கொண்டு வருவதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர். மணல் கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் இல்லை. மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் ராஜேந்திரன் (வயது 54), ரெஜிகுமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் மணல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டனர். அதில் கொக்கோட்டான் பாறை பகுதியில் இருந்து கொண்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கன்னியாகுமரி ரெயில்நிலையம் பகுதியில் இருக்கும் மணலை எடுத்து இரட்டை ரெயில்வே பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கிருந்து அனுமதியின்றி சில லாரிகள் தனியாருக்கு மணல் திருட்டு தனமாக விற்கப்படுவதாக மணல்கடத்தல்பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து மணல் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு லாரிகளில் மணலை ஏற்றி அருகில் உள்ள தனியார் இடத்தில் கொட்டுவது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பிடித்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். #tamilnews
    அரியலூர் அருகே மணல் கடத்தியது தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் மாங்காய்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் லாரி டிரைவரான பெரம்பலூரை சேர்ந்த சிவபாலன்(வயது 34), கிளனர் கண்ணன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து லாரி உரிமையாளரான சுரேஷ்(32) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமக்குடி அருகே அனுமதியின்றி மணலை திருடிச் சென்றது தொடர்பாக லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி அருகே பார்த்திபனூர்-நரிக்குடி விலக்கு ரோட்டில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி உரிமையாளர் மோசுகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டி(வயது 36), சிவகங்கை மாவட்டம் கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    விழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    நேற்று இரவு விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையறிந்ததும் போலீஸ்காரர் ராம்குமார் என்பவர் அந்த லாரியை மறிக்க முயன்றார்.  அப்போது லாரி டிரைவர் போலீஸ்காரர் ராம்குமார் மீது லாரியை மோதுவது போல் வேகமாக வந்தார். திடுக்கிட்டு போன ராம்குமார் அங்கிருந்து விலகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    பின்னர் போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் இருந்து விழுப்புரம் அருகே தில்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெளிணிகணேஷ் (வயது 37) காவணி பாக்கத்தை ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செளிணிது போலீஸ் காரர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற ராமச்சந்திரன், ஜெளிணிகணேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் மணல் கடத்தல்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கொள்ளிடக்கரை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோக்களில் மணல் கடத்தி வந்த அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் மகன் விஜய் (வயது 23), சங்கர் மகன் விக்னேஷ் (16) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சிறுகனூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சமயபுரம்:

    சிறுகனூர் அருகே மணல் அள்ளி செல்வதாக மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி 94 கரியமாணிக்கம் வருவாய் ஆய்வாளர் வனிதா கன்னியாகுடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள உப்பாற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு விரைந்து சென்றார். அவரைக் கண்டதும் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கன்னியாகுடியை சேர்ந்த முருகையா மகன் நாகராஜ்(வயது38), அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (40) ஆகிய இருவரையும் கைது செய்து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    சமயபுரம் வழியாக அனுமதி இன்றி மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் வழியாக லாரிகளில் மணல் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை செய்த போது, அதில் விராலிமலையில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்ராஜ் (வயது 31), சந்தோஷ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். லாரி உரிமையாளர்களான ஜஸ்டின்ராஜ், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர். 
    ராஜபாளையத்தில் முறைகேடாக மணல் ஏற்றி சென்ற 10 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான மணல் தடுப்பு சிறப்பு குழுவினர் இன்று அதிகாலை ராஜபாளையம்-தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 10 லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வரிசையாக வந்தன. அந்த லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சவுடு மண்ணுக்கு அனுமதி பெற்று இருப்பதாக கூறி ஆவணங்களை காட்டினர்.

    மேலும் ஆன்லைன் ரசீதையும் லாரியில் வந்தவர்கள் கொடுத்தனர். ஆன்லைன் ரசீதை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்த போது அந்த ரசீதுகளில் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது.

    கடந்த மாதத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு தொடர்ந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிந்தது.

    இந்த மணல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ராஜபாளையம் வழியாக நெல்லை மாவட்டம் கடையத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 10 மணல் லாரிகளையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த லாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    தொப்பம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    க.பரமத்தி:

    தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் நேற்று தொப்பம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி ஆகியோர் க.பரமத்தி அருகே உள்ள குளத்துப் பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(24) மற்றும் லாரியில் இருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த முருகேசன்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பண்ருட்டி அருகே மணல் கடத்தியதாக லாரி மற்றும் 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதிபெறாமல் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த மேல்குமாரமங்களத்தை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி திருவதிகை பாலூர்ரோட்டில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டியை ஓட்டிவந்த ரமேஷ் (35), சக்திவேல் (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    திருக்கோவிலூர் அருகே அனுமிதியின்றி மணல் கடத்திய 2 லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அடுத்த கொடுக்கப்பட்டு பெரியாயி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவர்களிடம் உரிய அனுமதியுடன் மணல் எடுத்துச் செல்லப்படுகிறதா? என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆடப்பட்டை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் சதீஷ்(வயது 24), வாசு மகன் ஏழுமலை(26) ஆகியோர் என்பதும், லாரிகளில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் கடத்தியதாக சதீஷ், ஏழுமலை ஆகியோரை கைது செய்ததோடு, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 
    ×