search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishan Pal Gurjar"

    • நாட்டில் மோடி ஆட்சியைதான் மக்கள் விரும்புகின்றனர்.
    • மோடி ஆட்சியில் இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் வரவில்லை.

    ஹாசன் :

    மத்திய எரிசக்தித்துறை இணை மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜார், ஹாசனுக்கு வந்திருந்தார். இதைதொடர்ந்து அவர், ஹாசன் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் மோடி ஆட்சியைதான் மக்கள் விரும்புகின்றனர். பா.ஜனதா எப்பொதும் குடும்ப அரசியலை எதிர்க்கும். இதனால் மக்களுக்கு மோடி மீதும் பா.ஜனதா மீதும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் வரவில்லை. பொருளாதாரம் சீராக உள்ளது. பா.ஜனதாவில், வாரிசு அரசியல் இல்லை.

    நாட்டில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் மோடியே பிரதமராகுவார். அவரை எதிர்க்கும் அளவுக்கு எதிர்க்கட்சியில் ஆள் இல்லை. கர்நாடக மக்கள் மனதில் மோடி, நீங்கா இடம் பிடித்துவிட்டார். வயது முதிர்வு காரணமாக தேவகவுடாவால் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாது. ஜனதாதளம்(எஸ்) வாரிசு அரசியலை ஊக்குவித்து வருகிறது. அரியானாவில் தேவிலால் குடும்பம் போன்று கர்நாடகத்தில் தேவகவுடாவின் குடும்பம் உள்ளது.

    மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையவேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஹாசன் மாவட்டத்தில் 6 லட்சம் கிஷான் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை கிஷான் திட்டத்தின் கீழ் ஒன்றரை லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதேபோல மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் உணவு பொருட்கள் ஏழைகளுக்கு கிடைப்பதில் சிரமம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவை சீர் செய்யப்படும். ஹாசனில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விமான நிலையம் வந்தால் ஹாசன் மாவட்டம் மேலும் வளர்ச்சி அடைந்துவிடும்.

    ஊழலுக்கு பா.ஜனதா துணை போகாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியான நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது. பெட்ரோல், டீசல் மீதான விலையை மோடி அரசு குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×