search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Flood Relief"

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களுக்கு, தன் கை உடைந்த நிலையிலும் அவர்களுக்கு நடிகை அமலாபால் உதவி வருகிறார். #Amalapaul #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief
    மலையாள நடிகையான அமலாபால், தமிழில் ‘மைனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

    தற்போது சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமலாபாலிற்கு அடிப்பட்டது. அதற்காக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர். 



    இந்நிலையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்து மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Amalapaul
    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Nayanthara
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை நயன்தாரா தன் பங்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, நடிகை ரோஹினி உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Nayanthara
    கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது. #KeraraFloods #KeralaRains
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து வெள்ளப்பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது.

    வீடு,உடமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவிக்கிறார்கள். கேரளாவை புரட்டிப் போட்ட மழையால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் சார்பாகவும் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக துயருற்ற கேரள மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் அவர்களது துயரத்தில் தமிழக அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொது மக்களில் ஒரு பகுதி என்ற நிலையிலும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளோம்.



    எங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சரை அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது.

    இதற்கு முன்உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeraraFloods #KeralaRains
    ×