search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karate competition"

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது.
    • 3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது. இங்கு பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடந்தது.

    3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சி நுட்ப இயக்குனர் மூர்த்தி தலைமை தாங்கினார். கராத்தே நுட்ப பயிற்று விப்பாளர் சுந்தர்ராஜன், உதவி பயிற்றுவிட்பாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    • கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    திண்டுக்கல்:

    கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம், பாண்டிச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த வர்ஷினி, ஜூலியானாேஜான்ஸ், ஸ்ரீலயா, நாகபிரபா ஆகிய மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர் ராஜகோபால் பரிசு வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் கோபிநாத், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் புகழி திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் புகழி திருமண மண்டபத்தில்  மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில்   நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10-12, 12-14, 14-16, 16-18 வயதுள்ளவர்கள் மற்றும் 18 வயதிற்கு   மேற்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் இன்டூஜல் கட்டா, டீம் கட்டா, குமித்தே, உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். 

    போட்டியில் ரமேஷ், ஜெயசந்திரன், சரவண கண்ணன், சதீஷ், லோகநாதன், சவுந்தர்,என். ரமேஷ், திருநாவுக்கரசுராஜா ஆகியோர்    நடுவர்களாக செயல்பட்டனர். அகில இந்திய கராத்தே சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கராத்தே சங்க மக்கள் தொடர்பு அலுவலர் முருகேஷ் ராஜ்,  கரூர் மாவட்ட கராத்தே சங்க இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட கராத்தே சங்க செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். 

    கரூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் சிதம்பரன், முன்னாள் புன்செய் புகளுர் பேரூராட்சித் தலைவர் முனுசாமி, கரூர் மாவட்ட கராத்தே சங்க துணை தலைவர் சுமங்கலி செல்வராஜ் ஆகியோர் கராத்தே போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். முடிவில் கராத்தே சங்கத்தை சேர்ந்த காமராஜர் நன்றி கூறினார்.
    ×