என் மலர்
புதுச்சேரி

கராத்தே போட்டியில் பரிசு வழங்கும் காட்சி.
பள்ளிகளுக்கு இடையே கராத்தே போட்டி
- திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது.
- 3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது. இங்கு பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடந்தது.
3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சி நுட்ப இயக்குனர் மூர்த்தி தலைமை தாங்கினார். கராத்தே நுட்ப பயிற்று விப்பாளர் சுந்தர்ராஜன், உதவி பயிற்றுவிட்பாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
Next Story