என் மலர்

  செய்திகள்

  வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
  X

  வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் புகழி திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
  வேலாயுதம்பாளையம்:

  கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் புகழி திருமண மண்டபத்தில்  மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில்   நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10-12, 12-14, 14-16, 16-18 வயதுள்ளவர்கள் மற்றும் 18 வயதிற்கு   மேற்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் இன்டூஜல் கட்டா, டீம் கட்டா, குமித்தே, உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். 

  போட்டியில் ரமேஷ், ஜெயசந்திரன், சரவண கண்ணன், சதீஷ், லோகநாதன், சவுந்தர்,என். ரமேஷ், திருநாவுக்கரசுராஜா ஆகியோர்    நடுவர்களாக செயல்பட்டனர். அகில இந்திய கராத்தே சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கராத்தே சங்க மக்கள் தொடர்பு அலுவலர் முருகேஷ் ராஜ்,  கரூர் மாவட்ட கராத்தே சங்க இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட கராத்தே சங்க செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். 

  கரூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் சிதம்பரன், முன்னாள் புன்செய் புகளுர் பேரூராட்சித் தலைவர் முனுசாமி, கரூர் மாவட்ட கராத்தே சங்க துணை தலைவர் சுமங்கலி செல்வராஜ் ஆகியோர் கராத்தே போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். முடிவில் கராத்தே சங்கத்தை சேர்ந்த காமராஜர் நன்றி கூறினார்.
  Next Story
  ×