search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadampur forest"

    • வனப்பகுதிக்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர்.
    • குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி பிரிவு கொளஞ்சி மடுவு வனப்பகுதியில் கடம்பூர் வனச்சராக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர்.

    அப்போது வனப்பகுதி க்குள் காட்டுயானை இறந்தது கிடந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியம ங்கலம் புலிகள் காப்பக கால்ந டை உதவி மருத்துவர் சதா சிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.

    பின்னர் தொண்டு நிறுவன பிரதிநிதி கிருஷ்ணகுமார், வனக்குழு தலைவர் மாரியப்பன், வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், குடல் புழுநோயால் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வனவிலங்குகள் குறித்த தவறான வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
    • தவறான வீடியோக்கள் பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலைக்கிரா மங்களில் பல சிற்றூர், கிராமங்களும் உள்ள நிலையில் பஸ் போக்கு வரத்து வசதிகளும் உள்ளன. இங்கு வாழும் மலைக்கிராம மக்கள் வெளியூருக்கு வேலை சம்பந்தமாகவும்,

    அத்தியாவசிய தேவைக ளுக்கும் மலைக்கிராமங்களில் இருந்து நகர பகுதிகளுக்கு பஸ், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக வனச்சாலை வழியாக பயணம் செய்கின்றனர்.

    அவ்வாறு வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீரு க்காக வெளியேறி சாலை யில் தென்படும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவி லங்குகளை பாதுகாப்பற்ற முறையில் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்கள் மற்றும் சில வருடங்களுக்கு முன்பு வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லுவது போலவும், யானை மின் வேலை பட்டு இறந்தது போன்று வேறு எங்கோ எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கடம்பூர் வனச்சரக பகுதிகளில் நடந்ததாக வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவேற்றி வரும் நிகழ்வுகள் தற்போது அதிகமாகி வருகிறது.

    கடம்பூர் மலைக்கிராம பகுதிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மலைக்கிராம மக்கள் மற்றும் வனத்துறையினருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், வனவிலங்குகள் குறித்த தவறான வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டுக்குள் இருந்து மக்கள் பயணிக்கும் சாலையில் இரவு நேரங்களில் நடமாடுவதாகவும். வேறு மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தின் மின் வேலியில் பட்டு யானை இறந்தது போன்ற நிகழ்வு கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தது போன்ற பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் படங்களை ஆன்லைனில் பதிவேற்றுவது, உள்ளூர் பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குரூப்புகளில் பகிர்வது போன்ற வனவிலங்குகள் குறித்து தவறான வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

    இதுபோன்ற வனவிலங்குகள் குறித்து தவறான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ வனத்துறை சார்பில் வனச்சட்டத்தின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66A-ன் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    ×