search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jasmine flower"

    • கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • ஓணம் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

    இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா நாட்களில் பூக்கள் விலை மிக உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைவாகவும் காணப்படும்.

    இந்த நிலையில் கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம்.

    மேலும் ஓணம் பண்டிகைக்காக கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 100 டன்களுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும்.

    நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள், ஓணம் பண்டிகை என தொடர்ச்சியாக வந்ததால், பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது.

    ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கோவை பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்கின்றனர்.

    இதனால் பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4000, முல்லை ஒரு கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, செவ்வந்தி (ஆரஞ்சு) ரூ.200, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160, வாடாமல்லி ரூ.200, தாமரை ஒன்று ரூ.10, அரளி ரூ.250,போழி பூ ரூ.60, துளசி ரூ40, மரி கொழுந்து ரூ.50 (ஒரு கட்டு), நந்தியா வட்டம் ரூ.500 என விற்பனை செய்யப்பட்டது.

    தொடர் பண்டிகை நாட்கள் காரணமாக பூக்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை பூக்கள் விலை உயர்ந்ததால் பெண்கள் அவதி அடைந்தனர்.
    ஆலங்குடி:

    கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு, சோளம், கடலை, தென்னை, மா, பலா, வேம்பு, தேக்கு, பூக்கள், பயிர் செடி, கொடிகள் என அனைத்தும் கடும் சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதி முழுவதும் சாகுபடி செய்த பூக்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இதனால் ஆலங்குடி பகுதியில் மல்லிகை பூக்கள் கிடைக்காமல் பெண்கள் அவதி அடைந்தனர். 

    இந்நிலையில் கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு தொடர்ந்து வந்ததால் பூக்கள் விலை அதிகமாக ஏறுமுகமாக உள்ளது. பனி காலத்தில் மல்லிகை பூக்களின் உற்பத்தி குறைந்தாலும் வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்டதாலும், அவற்றின் விலை வழக்கத்தை விட இரு மடங்கானது. சாதாரண நாட்களில் முழம் 20, ரூ30க்கு விற்க்கபடும். ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஒரு வார காலமாக மல்லிகை பூ முழம் ரூபாய் 200 ஐ தாண்டியது. சில கடைகளில் மல்லிகை பூ இல்லை.
    இருந்த போதிலும் மல்லிகைக்கு தனி மவுசு இருப்பதால் ரூ.200 ஐ கொடுத்தும் மல்லிகை பூவை பலரும் வாங்கிச் சென்றதால் விற்று தீர்ந்தன.

    மேலும் மல்லிகைக்கு மாற்றாக பெண்கள் விரும்பக்கூடிய நந்தியா வட்டை, காக்கட்டாம் பூ, ஜாதி மல்லி, முல்லைப் பூ, சென்டிப் பூ, இருவாச்சி பூக்கள் ரூ 50, கதம்ப பூக்கள் ரூ. 30 க்கும் இவைகளும் விற்க்கபட்டன. பூக்களின் விலை உயர்வால் பெண்களும், பொதுமக்களும் அவதி அடைந்தனர். 
    தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு ரூ.1700 அதிகரித்துள்ளது. #Jasmine
    நாகர்கோவில்:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல விதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    பழவூர், ஆவரைக்குளம், அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் இருந்து மல்லிகைப்பூ தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூவும் குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1100-க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது.

    ரூ.750-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.850 ஆக உயர்ந்திருந்தது. அதேபோல ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600 ஆக இருந்தது. சம்பங்கி ரூ.50, மஞ்சகேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.150, வாடாமல்லி ரூ.60, கோழிப்பூ ரூ.60 ஆக விற்பனையானது.

    ரூ.5-க்கு விற்பனையான தாமரைப்பூ இன்று ரூ.10 ஆக விற்கப்பட்டது.

    புத்தாண்டு மற்றும் திருமண நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. #Jasmine
    ×