search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jalaj Saxena"

    நான்கு முறை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு விருது கிடைத்தும், இந்திய ‘ஏ’ அணியல் இடம் கிடைக்காத வீரர். #BCCI
    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1986-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி பிறந்தவர் ஜலாஜ் சக்சேனா. தற்போது 31 வயதாகும் இவர் கேரளா அணிக்காக விளையாடி வருகிறார். 12 வருடத்திற்கு முன் தனது 19 வயதில் கேரளா அணியில் அறிமுகம் ஆனார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் 99 முதல்தர போட்டிகளில் விளையாடி 12 சதம், 28 அரைசதங்களுடன் 5418 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 37.62 ஆகும். பந்து வீச்சில் 262 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 5 முறை 10 விக்கெட்டும், 15 முறை 5 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

    ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதற்காக நான்கு முறை பிசிசிஐ-யின் விருதை பெற்ற இவருக்கு இந்தியா ‘ஏ’ அணியில் கூட இடம்கிடைக்கவில்லை. இது சக்சேனாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இதுகுறித்து சக்சேனா கூறுகையில் ‘‘நீங்கள் விருதுகள் வழங்கி கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு எந்தவித வெகுமதியும் இல்லை. கடந்த நான்கு வருடங்கள் நான் விருதுகள் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய ‘ஏ’ அணியில் கூட என்னை எடுக்காகது பற்றி பிசிசிஐ-யிடம் கேள்வி கேட்கவில்லை என்றால், அதில் எந்தவித பயனும் இல்லை. இந்த விஷயம் என்னை மிகவும் அவமதிக்குள்ளாக்கியுள்ளது. நான் மிகவும் மன ஆழுத்தத்துடன் உள்ளேன்.

    கடந்த நான்கு வருடமாக பிசிசிஐ உங்களுக்கு தொடர்ந்து விருது வழங்கி வருகிறது. ஆனால், உங்களை இதைவிட உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் பார்க்கவில்லை என்று ஒவ்வொருவரும் கேள்வி கேட்கிறார்கள். இது அவமானத்திற்குரியதாக நினைக்கிறேன்’’ என்றார்.



    2017-18 சீசனில் 49 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்க இருக்கிறது. இந்த விருது பெங்களூருவில் அடுத்த வாரம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை சிறந்த ஆல் ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×