search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jai Sriram College of Engineering"

    • துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, முதல்வர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் நந்தினி வரவேற்றார்.
    • கல்லூரி தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் உள்ள ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி மற்றும் உதவித்தொகை வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, முதல்வர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் நந்தினி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக உடுமலைப்பேட்டை விவேகானந்தா வித்யாலயா கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ். மூர்த்தி, புட் சட்டினி யூடியூப் சேனல் ராஜ்மோகன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நடைபெற்ற உதவித்தொகை வழங்குவதற்கான தகுதி தேர்வில் திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், கரூர், மாவட்டங்களிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கல்லூரிக்கு வர வாகனங்கள், மற்றும் மதிய உணவுகளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தங்களுக்கு பயனுள்ளதாகவும் நல்ல வழிகாட்டியாகவும் அமைந்துள்ளதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கல்லூரி நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பள்ளி மாணவ,மாணவிகள் 1500 பேர் கலந்து கொண்டனர்.
    • கண்காட்சியில் 200 அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மூன்று நாள் அறிவியல் கண்காட்சி நடைபெறஉள்ளது.இதற்கான துவக்கவிழா நடைபெற்றது.

    கோவை தனியார் நிறுவன நிர்வாகிகள் பி.ரமேஷ், கே.தில்லைசெந்தில்பிரபு ஆகியோர்அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தனர். இதில் கல்லூரி தலைவர் எம்.கோவிந்தசாமி, துணைத்தலைவர் டி.கே.கருப்பண்ணசாமி, கல்லூரி நிர்வாக அலுவலர் பேராசிரியர் அன்பரசு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 200 அறிவியல் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

    ×