search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indias rupees"

    அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Trump #CurrencyMonitoringList
    வாஷிங்டன்:

    ஒரு நாடு கரன்சி சந்தையில் தொடர்ந்து தலையிட்டாலோ, அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு உபரியாக இருந்தாலோ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். அதன்படி அமெரிக்க கருவூலத்தின் கண்காணிப்பு வளையத்தில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இருந்தன. 

    இந்த பட்டியலில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவையும் முதல் முறையாக சேர்த்தது. இந்தியா அதிக அளவில் டாலரை வாங்கியதாலும், அமெரிக்காவுடனான வர்த்தக உபரி குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாலும் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்தியாவின் பெயர், இந்த கண்காணிப்பு பட்டியலில் நீடித்தது. 

    ஆனால், 6 மாதம் கழித்து வெளியிடப்படும் அடுத்த அறிக்கையில், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியா கடந்த 6 மாதங்களாக மேற்கொண்டு வரும் அன்னிய செலாவணி நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டால், கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படும் என அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. #CurrencyMonitoringList
    ×