search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Plane Crash"

    • இந்திய பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
    • விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவை சேர்ந்ததல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு நள்ளிரவு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம்

    ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பதக்ஸ்தான் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டானது. ரேடாரில் இருந்து பயணிகள் விமானம் மாயமானது. விமானத்தைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சி செய்தும் முடியவில்லை.

    இதற்கிடையே, இந்திய பயணிகள் விமானம் தோப்கானே மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக வடகிழக்கு மாகாண தகவல் மற்றும் கலாசாரத்துறை இயக்குனர் ஜபிஹூல்லா அமிரி கூறுகையில், இந்திய பயணிகள் விமானம் பதக்ஸ்கானில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி உள்ளது. அப்பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர் என்றார்.

    விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர்? இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து விமானம் புறப்பட் டது? எந்த நிறுவனத்தின் விமானம்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மேலும் இந்திய விமான பயணிகள் கதி என்ன என்பதும் தெரியவில்லை.

    விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டு உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், ரஷியா நோக்கிச் சென்று விபத்தில் சிக்கிய விமானம் இந்தியாவைச் சேர்ந்ததல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    விபத்தில் சிக்கிய விமானம் இந்திய விமானமும் அல்ல, இந்தியாவில் இருந்து சென்ற விமானமும் அல்ல. அது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய விமானம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ×