search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idols"

    • பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்துள்ளது.
    • சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் சோழ அய்யனார் கோவில் பின்புறம் கற்சிலைகள் இருப்பதாக திட்டச்சேரி போலீ சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் பெயரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் அம்மன் சிலைகள் 2ம் இருந்துள்ளது.

    அதனை கைப்பற்றிய திட்டச்சேரி போலீசார் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. நாளை நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.

    கற்சிலைகளை யார் இங்கு கொண்டு வந்தது. எதற்காக கோவிலின் பின்புறம் வைத்து சென்றனர். மற்ற கோவில்களில் இருந்து திருடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்தலைவர் காமராஜர் சிலை, மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தி சிலை ஆகியவைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தஞ்சையில் பல்வேறு இடங்களில்இனிப்புக்கள் வழங்கப்பட்டு மறைந்த தேசியத் தலைவர்கள் வடக்குவீதி மற்றும் தஞ்சைமாநகராட்சியில் உள்ள தேசத்தந்தை காந்திசிலைகள், நேருசிலை கீழவாசலில் உள்ள பெருந்தலைவர்காமராஜரின் சிலை மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தி ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து சிலைகளுக்கு மாலை அணிவித்துஇனிப்புக்கள் வழங்கினார்முன்னதாக ஐஎன்டி யூசி மாவட்டபொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்டதுணை த்தலைவர் வக்கீல் கோ.அன்ப ரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கண்டிதம்பட்டு.கோவிந்தராஜ் மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபுமண்கொண்டார் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்சத்தியமூர்த்தி வட்டாரத்தலைவா; ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியி ல்மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா வடக்கு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் தலைவர்ரமேஷ்சிங்கம் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலை வர்இளையபாரத்ர மாநகர மாவட்ட கோட்டத்த லைவர் சதா வெங்கடேசன்வழக்கறிஞர்கள்சந்திரமோகன் ஆலக்குடி ராமலிங்கம் கவி. கோவிந்தராஜன்வீணை.கார்த்திகேயன் வரகூர் மீசைமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 புத்தர் சிலைகள், போக சக்தியம்மன் சிலை, சிவதாண்டவம், மீனாட்சி, விஷ்ணு, ரமணர் ஆகிய 7 பழங்கால சிலைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சர்வ மானிய தெருவில் உள்ள ஸ்தபதி மாசிலாமணி என்பவரது சிற்ப கூடத்தில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திரா உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் சிற்ப கூடத்துக்கு வந்து அங்கு இருந்த சிலைகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் 2 புத்தர் சிலைகள், போக சக்தியம்மன் சிலை, சிவதாண்டவம், மீனாட்சி, விஷ்ணு, ரமணர் ஆகிய 7 பழங்கால சிலைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.இந்த சிலைகளை சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்வதாகவும், அங்கு இந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர்கள் கூறினர். சிற்ப கூடத்தில் இருந்த சிலைகளை எடுத்துச்சென்றதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சக ஸ்தபதிகள் அங்கு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட நிலத்தை தொழிலாளர்கள் தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் கற்சிலைகள் இருப்பது தெரிந்தது.
    • 2 விஷ்ணு சிலைகள், 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 5 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட நிலத்தை தொழிலாளர்கள் தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் கற்சிலைகள் இருப்பது தெரிந்தது.

    இதனையடுத்து மன்னார்குடி வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மன்னார்குடி வருவாய் ஆய்வாளர் மாதவராஜ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வீரசேகரன் ஆகியோர் வந்தனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில தோண்டியபோது 2 விஷ்ணு சிலைகள், 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 5 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சிலைகளை வருவாய்துறை அதிகாரிகள் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தனர். மேலும் சிலைகளின் காலம், அதன் தொன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×