என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள்.
கழிவறை கட்ட தோண்டிய குழியில் கற்சிலைகள் கண்டெடுப்பு
- வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட நிலத்தை தொழிலாளர்கள் தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் கற்சிலைகள் இருப்பது தெரிந்தது.
- 2 விஷ்ணு சிலைகள், 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 5 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். வீட்டின் பின்புறம் கழிவறை கட்ட நிலத்தை தொழிலாளர்கள் தோண்டியபோது சுமார் 3 அடி ஆழத்தில் கற்சிலைகள் இருப்பது தெரிந்தது.
இதனையடுத்து மன்னார்குடி வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மன்னார்குடி வருவாய் ஆய்வாளர் மாதவராஜ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வீரசேகரன் ஆகியோர் வந்தனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில தோண்டியபோது 2 விஷ்ணு சிலைகள், 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 5 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சிலைகளை வருவாய்துறை அதிகாரிகள் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தனர். மேலும் சிலைகளின் காலம், அதன் தொன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






