search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Sacrifice"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    • பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி மற்றும் அவரது கூட்டாளி பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களை போலீசார் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    முதல்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை கடந்த மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர்.

    மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு அவர்களின் மர்ம உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அவற்றை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து நரமாமிசத்தை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த முயற்சி ஒரு புறம் நடக்க நரபலி கொடுத்த பெண்களின் உடல் உறுப்புகள் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி முகமது ஷபியிடம் கேட்டபோது, சில மாதங்கள் பிணவறையில் பணி புரிந்ததாகவும், அங்கு பிரேத பரிசோதனையின்போது உடல் உறுப்புகள் வெட்டப்படுவதை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். இதனை போலீசார் முழுமையாக நம்பவில்லை.

    எனவே இவர்களுக்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள். சில இடங்களில் எலும்பு துண்டுகளும் கிடைத்துள்ளன. அவை யாருடையது என்பதை கண்டுபிடிக்க பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்முடிவுகள் வந்த பின்னரே பகவல் சிங் தம்பதி மற்றும் முகமது ஷபி ஆகியோர் வேறு யாரையும் நரபலி கொடுத்துள்ளார்களா? என்பது தெரியவரும்.

    • முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது.
    • மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி (வயது 50), தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போனார்கள்.

    காணாமல் போன பத்மாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    போலீசார் முகமது ஷபியை கைது செய்து விசாரித்தபோது, அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதுபோல எர்ணாகுளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாயமான ரோஸ்லியும் இதுபோல நரபலி கொடுக்கப்பட்டதையும் முகமது ஷபி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபியின் நண்பர்களான பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் நரபலி நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதில் பகவல் சிங் வாழ்க்கையில் செல்வம் பெருக பூஜை நடத்தியதும், இதற்காக ரோஸ்லி மற்றும் பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாகவும் கூறினர்.

    நரபலி கொடுக்கும் முன்பு அவர்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறி அதிரவைத்தனர்.

    ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்க கடத்தி வந்தது முகமது ஷபி என்பதால் அவரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்த போலீசார் அவரது பின்னணி பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.

    இதில் முகமது ஷபியின் குரூர மனம், அவர் பெண்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார் என்பது பற்றிய பகீர் தகவல்கள் தெரியவந்தது. மேலும் முகமது ஷபி மீது 8-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகளும், 70 வயதான மூதாட்டியையும் கற்பழித்து அவரது மர்ம உறுப்புகளை சிதைத்த குற்றச்சாட்டும் அவர் மீது இருப்பது தெரியவந்தது.

    அப்படிதான் இவர் பகவல் சிங்கையும் தன் வசப்படுத்தி உள்ளார். பகவல் சிங்குக்கும் இவருக்கு பேஸ்புக் மூலமே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் தொடங்கிய பேஸ்புக் பக்கத்தில் பல ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டுள்ளார்.

    அதில் மாந்திரீகம் மூலம் செல்வம் பெருக வழிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனை பார்த்துதான் பகவல் சிங், முகமது ஷபியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அதன்பின்பு இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதன்பின்புதான் பெண்களை வைத்து நிர்வாண பூஜை, நரபலி அளவுக்கு சென்றுள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக பகவல் சிங்கின் கண்முன்பே அவரது மனைவியுடன் முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். இதுவும் செல்வம் தரும் பூஜையின் ஒரு பகுதி என பகவல் சிங்கிடம் கூறியுள்ளார்.

    முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் சில மாணவிகள் அடிக்கடி முகமது ஷபியின் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில் 2 பேரிடம் முகமது ஷபிக்கு அதிக நெருக்கம் இருந்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

    அந்த மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவிகளை அவர் செக்ஸ் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் நரபலி சம்பவம் வெளியான பின்னர் இதுபோன்று வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் எர்ணாகுளம் மட்டுமின்றி கேரளா முழுவதும் இந்த காலகட்டத்தில் சுமார் 26 பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவர்களில் யாராவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்காக கைதான 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். இதில் அவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இந்த 12 நாட்களிலும் போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அப்போது நரபலி சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
    • கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்(வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா(54), எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவர், கடந்த 26-ந் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து கடவந்தரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    மர்மமான முறையில் 2 பெண்கள் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பத்மாவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில் பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷபி என்ற ஷிகாப்பு (48) என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதாவது, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவந்த் (55), அவரது மனைவி லைலா (52) ஆகியோர் செல்வந்தராகும் ஆசையில் பத்மா, ரோஸ்லின் ஆகியோரை கடத்தி சென்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.

    மேலும் பரிகார பூஜை என்ற பெயரில் உடல்களை துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதுடன், ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மீதமுள்ள உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து பகவந்த், லைலா மற்றும் முகமது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முகமது ஷபி மற்றும் பகவத்சிங் ஆகியோர் காக்கநாடு மாவட்ட சிறைச்சாலையிலும், லைலா அதே பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

    கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள டி.ஜி.பி. அனில் காந்த் கூறியதாவது:-

    இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொச்சி மாநகராட்சி துணை கமிஷனர் எஸ்.சசிதரன் தலைவராகவும், பெரும்பாவூர் துணை சூப்பிரண்டு அனூஜ் பாலிவால் முக்கிய விசாரணை அதிகாரியாகவும் செயல்படுவார்கள். இவர்களுக்கு உதவியாக எர்ணாகுளம் மத்திய போலீஸ் கமிஷனர் சி.ஜெயக்குமார், கடவந்தரா போலீ்ஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பைஜூ ஜோஸ், காலடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நரபலி கொடுத்த 2 பெண்களையும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர்.
    • வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50). இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு போலீசார் தோண்டி பார்த்தபோது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

    இவர்கள் இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மேலும் பல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதால் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பகவல் சிங், லைலா, முகமது ஷபி ஆகியோரை 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

    2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில் 3 வயது குழந்தை கொலை வழக்கில், பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #HumanSacrifice
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மகள் ஷாலினி (வயது 3) கடந்த மாதம் 26-ம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.



    ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதன்பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குழந்தையை  கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். #HumanSacrifice
    ×