search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudka confiscated"

    பெங்களூருவில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    பெங்களூருவில் இருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் பை-பாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் இருந்து வரும் அனைத்து வாகனத்தையும் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 மினி டெம்போ வேனை பிடித்து சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு வண்டியிலும் 50 மூட்டைகள் என மொத்தம் 150 மூட்டைகள் இருந்தது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நாங்கள் வாடகைக்கு சென்றோம். இந்த மூட்டைகளை சேலம் மெய்யனூரை சேர்ந்த மாதேஸ் என்பவர் அனுப்பி வைத்ததாக கூறினர். இதையடுத்து போலீசார் மாதேஸ் என்பவரை பிடித்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கு செல்கிறது? யாருக்கு செல்கிறது? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி கிருஷ்ணசாமி ரோடு பகுதியில் கடைகளுக்கு ஆட்டோ மூலம் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் 200 கிலோ குட்கா இருந்தது. விசாரணையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கோவை கணபதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப்பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று கோவை செல்வபுரம் சாவித்ரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் ரூ.1 லட்சத்து 114 ஆயிரத்து 400 மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×