search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் தடைசெய்யப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்
    X

    கோவையில் தடைசெய்யப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்

    கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி கிருஷ்ணசாமி ரோடு பகுதியில் கடைகளுக்கு ஆட்டோ மூலம் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் 200 கிலோ குட்கா இருந்தது. விசாரணையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கோவை கணபதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப்பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று கோவை செல்வபுரம் சாவித்ரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் ரூ.1 லட்சத்து 114 ஆயிரத்து 400 மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். #tamilnews
    Next Story
    ×