search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grama uthayam"

    • கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
    • கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி கருத்துரை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை கோபால சமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதை பொருட்கள் பயன்டுத்துவதைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் குமாரி வரவேற்று பேசினார். போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதில் இளைஞர்கள் பங்களிப்பு குறித்து கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் கருத்துரை ஆற்றினார்.

    கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர் முருகன், தன்னார்வ தொண்டர் மலர்கொடி, சுமிதா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் துர்கா கவுரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    ×