search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Bycycles"

    • மாணவ- மாணவிகளுக்கு திறன்மேம்பாடு குறைவாகவுள்ளது என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஏ.வி. பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் பயிலும் 427 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    தரமான கல்வி

    மக்களின் எதிர்காலத்தையும் எதிர்கால தலைவர்களாக உருவாகவுள்ள மாணவிகளுக்கு நல்ல முறையில் தரமான கல்வி வழங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

    அந்த வகையில் ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்து என்ற படிப்பு, அதனைத் தொடர்ந்து பல்வேறு படிப்புக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்கள் படிப்புக்கு பின்பு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது எதற்கு என்றால் பல நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் போது நம்முடைய மாணவ- மாணவி களுக்கு திறன்மேம்பாடு குறைவாகவுள்ளது என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நமது பெற்றோர்களை போல் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். இந்த படிப்பு காலம் தான் முக்கியமான காலம். இதை கடந்து விட்டால் திரும்பவும் இதுபோன்ற மாணவ பருவம் வராது. இதை நல்லமுறையில் படிக்கின்ற காலத்தை விரையம் செய்யாமல் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்து தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு உங்களது திறமையை வளர்த்து கொண்டால் வெற்றி அடைய முடியும்.

    எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளித்து சாதனையாக்கி வீர நடைபோட வேண்டும். இந்த பள்ளியில் நான் படித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எஸ்.ஏ.வி. பள்ளி தலைமை ஆசிரியர் கிருபை வேல்முருகன், உதவி தலைமை ஆசிரியர் ஞானதுரை, பள்ளியின் செயலாளர் வக்கீல் சொர்ணலதா, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி சைமன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பரிபூரணம், தாளாளர் ராஜாசிங், கவுன்சிலர் ராமுத்தம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, மீனாட்சி சுந்தரம் மற்றும் மணி, அல்பட் உள்பட ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×