search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fireaccident"

    • கந்தர்வகோட்டை அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து
    • தீ விபத்தில் 30 மின்கலன்கள் எரிந்து நாசமானது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை- வெள்ளாள விடுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 440 கேவி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேட்டரி குடோனில் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்தது.இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்ட நிலையில், கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீரர்கள் தண்ணீர் மற்றும் மணல்களை கொண்டு போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 30 மின்கலன்கள் தீயில் எரிந்து நாசமாகின.துணை மின் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து மின்துறை அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
    • தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    திருச்சி,

    அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்து வந்தது/

    இந்நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அதில் இருந்து கிளம்பிய புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் சென்று குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 3 தீயணைப்பு வாகனங்களும், 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகளும் சென்று, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அரியமங்கலம் குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிந்ததால், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியமங்கலம் எஸ்.ஐ.டி, யில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை செல்லும் சாலையில் புகை மூட்டங்களுடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீ பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    • சுக்கிரன் விடுதி கிராமத்தில் திடீரென குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை,

    கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளி. இவர் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் குடிசையில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் மகனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகனின் குடிசையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாலமுருகனின் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    • கொட்டப்பட்டு உர மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து வீரர்கள்

    திருச்சி,

    திருச்சி கொட்டப்பட்டு அருகில் இருக்கும் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாநகராட்சியின் மண்டலம் 3. நுண் உர செயலாக்க மையம் உள்ளது.இந்த மையத்தில் பொன்மலை பகுதியை சேர்ந்த குப்பைகள் கொண்டுவரப்பட்ட தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து எடுப்பதற்கு என்று தனியாக பிளாஸ்டிக் குடோன் உள்ளது.இந்த நிலையில் இன்று நுண் உர மையத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது..இந்த தீ மள மள என பரவியது.இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள் .இது குறித்து உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு தகவல் அறிந்து 46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், மாநகராட்சி உதவி பொறியா ளரும் மற்றும் ஊழியர்களும் தீயை அணைக்கும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.உரிய நேரத்தில் தீயணை ப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வர ப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணை ப்பு துறையினர் மற்றும் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லக்குடி சுங்கச்சாவடியில் பரபரப்பு
    • திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    திருச்சி,

    ராமேஸ்வரத்திலிருந்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு ஒரு ராட்சத கிரேன் வாகனம் வந்து கொண்டிருந்தது. இதனை உத்திர பிரதேச மாநிலம் ஜோகன்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கிரேன் வாகனம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி அருகே உள்ள கீழரசூர் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது அந்த கிரேன் வாகனத்தின் எஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த புள்ளம்பாடி மற்றும் டால்மியாபுரம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர்கள் பாரதி, சிவக்குமார் தலைமையில் அசாருதீன், ரமேஷ், குமார், கனகராஜ், அருண்ராஜ்,பிரகாஷ் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நுரை கலவையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கிரேன் வாகனம் முற்றிலும் இருந்து நாசமானது. தீ விபத்துக்குள்ளான ராட்சத கிரேன் வாகனம் 200 டன் எடை கொண்டது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அன்னவாசலில் வேதனை சம்பவம்
    • 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தீயணைப்பு பணிக்கு உதவி செய்தனர். பெரும்பாலானவர்கள் தீ பற்றி எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடுவதையும் தங்களது செல்போன்களில் படம் எடுப்பத்திலேயே குறியாக இருந்தனர். தீப்பற்றி எரியும் வேலையில் அதனை அணைக்க முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுக்கும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருந்தது.இயற்கையை காக்கும் போராட்டத்தில் மனித சமுதாயம் இதுபோன்ற நிலைக்கு சென்றது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    • புல் வெளிகள் தீயில் கருகி நாசமாகின
    • அருகில் கியாஸ் குடோன் உள்ளநிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் காய்ந்த புல்வெளி பகுதியில் நேற்று மாலை தீ பற்றி எரிவதாக பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகே சோளம் அறுக்கப்பட்டு சோளத்தட்டைகள் இருந்தமையால் காற்றின் மூலம் அங்கு பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் குடோன் உள்ளது. இதனால் தீயணைப்பு துறையினர் கவனமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 200 மீட்டர் வரை புல்வெளிகள் எரிந்து கருகின. அருகில் இருந்த சில குறு மரங்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    ஐதராபாத்தில் கண்காட்சி நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 பேர் படுகாயமடைந்தனர். #Hyderabadfireaccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தின் நாம்பள்ளி பகுதியில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், ஜனவரி 1-ம் தேதி முதல் அகில இந்திய தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நமாய்ஷ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கண்காட்சி, மொத்தம் 45 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றாக இந்த கண்காட்சி உள்ளது. இக்கண்காட்சி ஐதராபாத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ளது.

    இந்நிலையில், கண்காட்சி அரங்கில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டது. பின்னர் மற்ற கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் ஸ்டால்களில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு 13 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கண்காட்சி அரங்கில் இருந்த பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த தீ விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 100 கடைகள் தீயில் கருகி சாம்பலாகின.

    கண்காட்சியில் இருந்த விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் , தங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வங்கிகளில் கடன் பெறும் வகையில் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் இழப்பை ஈடுசெய்ய ஆய்வு நடத்தப்படும் என தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Hyderabadfireaccident
    ×