search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female students"

    • மதுரையில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் விழா நடந்தது.
    • 538 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    மதுரை

    'தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு, உயிர் கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். இதற்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் செய்தனர். இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இன்று ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 'புதுமைப்பெண்' தொடக்க விழா, சென்னையில் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மதுரை மாவட்டம் முழுவதிலும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 538 மாணவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கி, தொடங்கி வைத்தார்.

    இதில் கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாதனசேகர் வரவேற்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    இந்த விழாவில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கையில் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அமைப்பு சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வட்டார அளவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவிய போட்டியும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது.

    இந்த போட்டிகளை சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கந்தவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை காசோலைகளாக வழங்கப்பட்டது. இந்த காசோலை தொகையானது மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று காசோலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் வென்ற மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கரோலின் நிஷி, ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் சதீஷ்குமார், காளிராசா, சித்திக், பாத்திமா, கவிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
    ×