search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female chancellor"

    பெண்ணை மிரட்டி கைதான போலி சப்-இன்ஸ்பெக்டர் திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் பிரேமா(வயது 42). விசைத்தறி அதிபர்.
    இவருக்கும், தேவனாங் குறிச்சி அருகே உள்ள கீழேரிப்பட்டியை சேர்ந்த விசைத்தறி அதிபர் விக்னேஷ்(45) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரேமா விக்னேசுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டுப்பார்த்தும் பணத்தை கொடுக்கவில்லை. 

    இதனால் விக்னேஷ், தனது நண்பர் கோம்பை நகரை சேர்ந்த பெயிண்டிங் காண்ட்ராக்டர் ரத்தினம் (45) என்பவரை சந்தித்து, பிரேமாவிடம் இருந்து தனது பணத்தை எப்படியாவது? வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து ரத்தினம் நேற்று பிரேமாவை சந்தித்து பேசினார். தான் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில்  சப்-இன்ஸ்பெக்டராக உள்ளேன். விக்னேசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு. இல்லையென்றால், வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    பயந்து போன பிரேமா இது பற்றி இன்ஸ்பெக்டரிடம் கூறுவதற்காக திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சப்-இன்ஸ் பெக்டர் என்று கூறி ரத்தினம் என்பவர் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டினார் என தெரிவித்தார்.

    அதற்கு போலீசார், ரத்தினம் என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் எங்கள் போலீஸ் நிலையத்தில் கிடையாது என்றனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரேமா, தன்னை மிரட்டியது போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பதை உணர்ந்தார்.

    போலீசாரும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி போலி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினத்தை கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
    ×