search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father arrest"

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி எதிர்ப்பை மீறி பெண் குழந்தை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் பிபிநகர் மண்டலம் சின்ன பலுகு தண்டா கிராமத்தை சேர்ந்தவர் புக்யாசேகர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பத்ரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் 3-வது முறையாக கர்ப்பம் அடைந்த பத்ரிக்கு அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. வருமானம் குறைவாக இருப்பதால் அப்பெண் குழந்தையை விற்க தந்தை புக்யாசேகர் முடிவு செய்தார்.

    அதற்கு அவரது பெற்றோர், மற்றும் பத்ரியின் சகோதரர் பாண்டு ஆகியோர் சம்மதித்தனர். இதை அறிந்த பத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்து கணவரிடம் சண்டை போட்டார்.

    அவரை கணவர், மாமனார், மாமியார் மிரட்டினர். குழந்தையை கொடுக்காவிட்டால் வீட்டுக்கு அழைத்து செல்ல மாட்டோம் என்றனர். அதனால் வேறு வழியின்றி குழந்தையை கொடுத்தார்.

    இதையடுத்து இடைத்தரகர் மூலம் பெண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு ஒரு தம்பதியினருக்கு விற்றனர்.

    குழந்தையை விற்றது தொடர்பாக குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் போலீசிடம் புகார் செய்தனர். போலீசார் புக்யாசேகர், அவரது பெற்றோரிடம் விசாரித்த போது குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டனர்.

    பத்ரியின் சகோதரர் பாண்டு ஏற்பாட்டில் நரசிங்கராவ் என்பவர் தனது உறவினர் நரசிம்மராவுக்கு குழந்தையை விற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தந்தை புக்யாசேகர், அவரது பெற்றோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உத்தரபிரதேச மாநிலத்தில் செல்போனில் கேம் விளையாடியதால் மகனை அடித்து கொன்ற தந்தை, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டம் பரஸ்ராம்பூரைச் சேர்ந்த ராகேஷ். இவரது மகன்கள் ராகுல் (13), ராஜன் (8).

    இந்த நிலையில் சிறுவன் ராகுல் திடீரென மாயமனான். இதுகுறித்து அவனது தாத்தா பால்கோவிந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது தந்தை ராகேஷ் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருந்தது.

    இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், “தொடர்ந்து செல் போனில் விளையாடியதால் மகனை அடித்து கொன்றதாக” தெரிவித்தார்.

    சிறுவன் ராகுல் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிபடியே இருந்து வந்தான். சாப்பிடாமலும் தொடர்ந்து செல்போனிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறான். இதை தந்தை கண்டித்தும் கேட்கவில்லை.

    சம்பவத்தன்று ராகேஷ், மகனை அழைத்தபோது அவன் செல்போனில் விளையாடியபடி இருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ் மகனை நெஞ்சில் காலால் மிதித்து தள்ளினார்.

    இதில் சிறுவன் ராகுல் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ் மகன் உடலை அங்குள்ள காட்டு பகுதியில் புதைத்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் சிறுவன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews

    போதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற வழக்கில் அவரது உடல் இன்று தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்படுகிறது.
    திண்டுக்கல்:

    மதுரை டோக்நகர் எஸ்.பி.ஓ. காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் சவுபா என்ற சவுந்திரபாண்டியன். (வயது 55). எழுத்தாளராக பணியாற்றிய இவர் ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற படத்துக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவரது மனைவி லதா பூரணம் (50). கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக உள்ளார். இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கோவில்பட்டியில் லதா பூரணம் தனியாக வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் விபின் (27). முதுநிலை பட்டதாரியான இவர் தாய்-தந்தை வீட்டில் மாறி மாறி வசித்து வந்தார். போதைக்கு அடிமையானவர். இதனால் தந்தையுடன் தகராறு செய்து அடிக்கடி பணம் வாங்கி செல்வார்.

    கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை. அவரது தாய் லதா பூரணம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் விலை உயர்ந்த காரை விபின் விற்று விட்டதால் அவருக்கும் தனது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு விபினை காணவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து சவுந்திரபாண்டியனிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான பதிலளித்தார். எனவே அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் மறைமுகமாக அவரை கண்காணித்து வந்தனர். அதில் சவுபா தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொன்றது தெரிய வந்தது.

    போலீசாரிடம் சவுபா அளித்த வாக்குமூலத்தில், நான் விலை உயர்ந்த காரை எனது மகனுக்கு வாங்கி கொடுத்தேன். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வான். ஒரே மகன் என்பதால் அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தேன். ஆனால் நான் வாங்கிக் கொடுத்த காரை என்னிடம் சொல்லாமல் விற்று விட்டான்.

    இது குறித்து நான் கேட்டபோது என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினான். இதனால் ஆத்திரமடைந்த நான் சுத்தியலால் அவனது தலையில் அடித்தேன். இதில் மயங்கி விழுந்து இறந்து விட்டான்.

    திண்டுக்கல் அருகே உள்ள கொடை ரோடு பகுதியில் எனக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு அவனது உடலை எடுத்துச் சென்றேன். பள்ளப்பட்டி மூப்பர் தெருவைச் சேர்ந்த பூமி (40), நிலக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த கனிக்குமார் என்ற கணேசன் (42) ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தில் விபின் உடலை புதைத்து விட்டேன் என்று கூறினார்.

    இதனையடுத்து போலீசார் சவுபா உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த பூமி மற்றும் கணேசனை கைது செய்தனர். விபின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

    தாசில்தார் முன்னிலையில் அரசு டாக்டர்கள், சவுபாவை அழைத்து வந்து விபின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட வைக்கின்றனர்.

    அதன் பிறகு உடல் தோண்டி எடுத்து அதே இடத்தில் பரிசோதனை நடைபெறும். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால் ஏராளமான கிராம மக்கள் காலை முதலே அங்கு குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×